கமல் மறுத்ததை தட்டி தூக்கிய சிம்பு.. புலிக்கு பிறந்தது பூனை இல்லைன்னு நிரூபித்த எஸ் டி ஆர்

3 hours ago
ARTICLE AD BOX

சிம்பு, கமலுடன் இணைந்து மணிரத்தினம் இயக்கி வரும் தக்லைப் படத்தை முடித்து விட்டார். இன்று அவரது பிறந்த நாளன்று அடுத்தடுத்து தான் நடிக்கவிருக்கும் படங்களின் லைன் அப்பை அறிவித்து வருகிறார். அவரது பிறந்த நாள் பரிசாக ரசிகர்களுக்கு செம பூஸ்ட் கொடுத்துள்ளார்.

ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார். அதற்குப் பின் பார்க்கிங் பட இயக்குனர் பாலகிருஷ்ணனுடனும் , தேசிங்கு பெரியசாமியுடனும் அடுத்தடுத்து படங்கள் பண்ணவிருக்கிறார். ஏற்கனவே இரண்டு வருடங்களாக காத்திருக்கும் STR48 படத்தையும் கையில் எடுக்கிறார்.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் முன்னரே அறிவிக்கப்பட்ட படம் STR48. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இந்த படத்திற்கு ஆரம்பத்தில் தேசிங்கு பெரியசாமி நிர்ணயத்த பட்ஜெட் 150 கோடிகள். இதற்கு கமல் சம்மதிக்கவில்லை.

இந்த படத்திற்காக சிம்பு ஒரு வருடங்களாக நீண்ட தலைமுடியை வளர்த்து தயாராகி வந்தார். ஆனால் பட்ஜெட் காரணமாக இந்த படத்தை நிராகரித்தார் கமல். ஆனால் இந்த கதை மிகவும் பிடித்துப் போனதால் சிம்பு துபாய் வரை சென்று தயாரிப்பாளர்களை தேடி வந்தார். ஆனால் அவர்கள் 100 கோடி வரை தருவதாக கூறினார்கள்.

ஆனால் 150 கோடிக்கு குறைவாக எடுத்தால் படம் நிறைவாக இருக்காது என தேசிங்கு பெரியசாமி கூறிவிட்டதால்,இப்பொழுது சிம்பு இந்த படத்தை தானே தயாரிக்கப் போகிறார். இதற்காக ATMAN CINE ARTS என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

Read Entire Article