கமலுக்கு அடுத்து சகலகலா வல்லவன்னா அவரா? அதையும்தான் பார்ப்போமே..!

6 hours ago
ARTICLE AD BOX

தமிழ்த்திரை உலகில் சினிமாவில் அக்கு வேறு ஆணிவேராக அத்தனை விஷயங்களையும் விரல் நுனியில் வைத்து இருப்பவர் கமல். அவரை சகலகலாவல்லவன்னே சொல்வாங்க. அவருக்குப் பிறகு யாரு என்பதை பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி இப்படி சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

STR: சிம்புவுக்கு அட்வைஸ் தர முடியாது. அவர் என்னோட குழந்தை. வந்து கமல் சார் எந்தளவு நாலெட்ஜோ அந்த அளவு நாலெட்ஜபிள். ரொம்ப அதிகமான ஐகியூ உள்ளவர். ஒண்ணும் தெரியாத டைரக்டரை ஒரு செகண்ட்ல கண்டுபிடிச்சிடுவாரு. அப்படி வரும்போது அவங்களால அனுபவப்பூர்மா நடிக்க முடியாது.


கமலுக்கு அடுத்து சகலகலா வல்லவன்: கமல் சார் கூட படங்கள்ல பிளாப் கொடுக்கலாம். அவருக்கு அந்த பர்ஸ்ட் ஷாட் எடுக்கும்போதே தெரிஞ்சிடும். இந்த ஆளு அவ்ளோதான். அவசரப்பட்டு ஒத்துக்கிட்டோம். அப்படின்னு தெரியும். ஆனா கமிட் பண்ணிக்குவாங்க. வாயை மூடிக்கிட்டு முடிச்சிக் கொடுத்துடுவாங்க. ஆனா சிம்புவுக்கு என்ன தெரியாதுன்னு சொல்லுங்க. மியூசிக், நடிப்பு, எடிட்டிங், பாடுவது, எழுதுவதுன்னு எல்லாமே தெரியும். உண்மையிலேயே சகலகலா வல்லவன். கமலுக்கு அடுத்துன்னு சொல்வேன்.

அமிதாப்பச்சன் மாதிரி கமல்: ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டைம் இருக்கு. இப்ப தான் விஜய் சார் போகப்போறாருன்னு சொன்னாங்க. அந்த இடத்துக்கு சிவகார்த்திகேயன் வரப்போறாருன்னு நாங்க நம்பிக்கிட்டு இருக்கோம். அடுத்து கமல் சார் இன்னும் 5 வருஷமோ, 10 வருஷமோ கழிச்சி அவர் அமிதாப்பச்சன் மாதிரி வேற ரூட்ல நடிக்க ஆரம்பிக்கும்போது அந்த இடத்துக்கு சிம்பு வர்றதுக்கான எல்லா வாய்ப்பும் இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தக் லைஃப்: கமலும், சிம்புவும் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் கமலுடன் சிம்பு நடித்துள்ளதால் அவரது மார்க்கெட் எகிறியுள்ளது. இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article