தொழிலாளர்களின் கடனை அடைக்க ஹாலிவுட் நடிகர் ரூ.8.7 கோடி நிதியுதவி

4 hours ago
ARTICLE AD BOX

லண்டன்: ‘அண்டர்வேர்ல்ட்: ரைஸ் ஆஃப் த லைகன்ஸ்’, ‘தி ட்விலைட் சாகா: நியூ மூன்’, ‘மிட்நைட் பாரிஸ்’ உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர், மைக்கேல் ஷீன். தற்போது அவர் செய்துள்ள உதவி பற்றி இணையதளங்கள் பரபரப்பாக எழுதி வருகின்றன. பிரிட்டனிலுள்ள போர்ட் டால்போட் நகரில், டாடா ஸ்டீல் நிறுவனம் கடந்த ஆண்டு தனது எஃகு ஆலையை மூடியதால் 2,800 ஊழியர்கள் வேலை இழந்தனர்.

இதனால், அந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டன. அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்தனர். இதையறிந்த மைக்கேல் ஷீன், பாதிக்கப்பட்ட 900 ஊழியர்களுக்கு 8.7 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி, அவர்களின் கடனை அடைத்துள்ளார்.

பிரிட்டனில் சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த மைக்கேல் ஷீன், வேலை இழந்த தனது சொந்த ஊர் மக்களை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து இதை செயல்படுத்தினார். அவர் கூறுகையில், ‘வேலை இழந்த தொழிலாளர்கள் யார் என்று எனக்கு தெரியாது. அவர்களின் கடன் பற்றி மட்டுமே தெரியும். போர்ட் டால்போட்டில் காபி ஷாப்பில் வேலை பார்த்த ஒருவருடன் நான் உணர்ச்சிகரமாக பேசியபோது, இந்த தகவலை அறிந்து பதறினேன். உடனே அந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்ய முன்வந்தேன்’ என்றார்.

Read Entire Article