கமகம மணத்தில் காரைக்குடி சிக்கன் கறி! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க! இதோ மாஸ் ரெசிபி!

5 hours ago
ARTICLE AD BOX

தேவையான பொருள்கள்

அரை கிலோ சிக்கன்

ஒரு பெரிய வெங்காயம் 

2 தக்காளி 

2 கொத்து கறிவேப்பிலை 

கால் டீஸ்பூன் சோம்பு 

தேவையான அளவு எண்ணெய் 

தேவையான அளவு உப்பு 

2 டீஸ்பூன்  சாம்பார் பொடி 

2 பச்சை மிளகாய் 

1 டீஸ்பூன் மிளகு 

2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 

ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் 

மசாலா அரைப்பதற்கு

ஒரு டீஸ்பூன் மிளகு 

ஒரு டீஸ்பூன் சீரகம் 

6 வற மிளகாய் 

4 டீஸ்பூன் மல்லி 

ஒரு துண்டு பட்டை

5 கிராம்பு

4 ஏலக்காய்

மராத்தி மொக்கு 

ஜாதிக்காய் 

கறிவேப்பிலை

கால் கப் துருவிய தேங்காய் 

செய்முறை

முதலில் சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பிரட்டி வைக்கவும்.  பின்னர் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ளவற்றில் தேங்காய் துருவல், கறிவேப்பிலை தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும்.  அதன் பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.  கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வதக்கி எடுத்து ஆறவிடவும். ஆறியதும் முதலில் பொடியாக அரைத்து பின்பு தேவைக்கேற்ப நீர் விட்டு நைசாக அரைத்துக் எடுத்துக் கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, சிறிது கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்

தக்காளி குழைய வதங்கியதும் சாம்பார் பொடி அல்லது மிளகாய் மற்றும் தனியா தூள் சேர்த்து பிரட்டி எண்ணெய் பிரிய வதக்கவும். தூள் வாசம் போனதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும். சிக்கன் நன்றாக வெந்ததும் அரைத்த மசாலா கலவையை ஊற்றி கலந்து கொதிக்கவிடவும். பச்சை வாசம் போகக் கொதித்து எண்ணெய் பிரியும் போது சிறிது கறிவேப்பிலை மற்றும் மிளகு தூள் (விரும்பினால்) சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.  சுவையான காரைக்குடி சிக்கன் கறி தயார். இதனை உங்களது வீடுகளில் முயற்சி செய்து பார்த்து சாப்பிடுங்கள். வீட்டில் உள்ளவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இந்த சிக்கன் கறியின்  ருசி இருக்கும். 

 

 

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, 2019 ஆம் ஆண்டு முதல் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் ஆங்கில இலக்கியத் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 5 ஆண்டுகளுக்கும் மேல் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஆகும். இவர் கடந்த 2024 செப்டம்பர் மாதம் முதல் தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் தேசம், லைப்ஸ்டைல், சினிமா மற்றும் உலகம் தொடர்பான செய்திகளில் தனது பங்களிப்பை அளித்து வருக்கிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
Read Entire Article