ARTICLE AD BOX
நமது வீடுகளில் ஏதேனும் சுற்றுலாவுக்கு செல்ல வேண்டுமென்றால் முதலில் நாம் எடுத்து செல்லும் சாப்பாடு என்றால் அது புளியோதரை தான். புளியோதரை செய்து சென்றால் ஓரிரு நாட்களுக்கு அது கெட்டுப் போகாமல் மிகவும் சுவையாக இருக்கும். எனவே அடிக்கடி வீட்டில் புளியோதரை செய்து வைப்பது வழக்கமான ஒன்றாகும். சிலருக்கு புளியோதரை செய்யத் தெரியாமல் இருக்கும். அவர்களுக்காத்தான் எளிமையான ரெசிபி இங்கு கொடுத்துள்ளோம்.
தேவையான பொருட்கள்
1 கப் உதிரியாக வடித்த சாதம்
ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளி
3 வற மிளகாய்
2 பச்சை மிளகாய்
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
ஒரு சிட்டிகை பெருங்காயம்
10 சிறிய வெங்காயம்
தேவையான அளவு எண்ணெய்
கால் கப் வேர்க்கடலை
1 டீஸ்பூன் எள்
பொடி செய்யத் தேவையான பொருட்கள்
4 வற மிளகாய்
1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
2 டீஸ்பூன் வெந்தயம்
தாளிக்க :
அரை டீஸ்பூன் கடுகு
1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
4 முந்திரிபருப்பு
2 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
முதலில் புளியை கரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றாமல் எள்ளை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்து எள்ளினை ஆறவைத்து ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது மீண்டும் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் சிறிதளவு பெருங்காயத்தை சேர்க்கவும். மேலும் வற மிளகாய்களை சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகாய் கருப்பாக வதங்கிய பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட வேண்டும். மேலும் நாம் முன்னதாக கரைத்து வைத்திருந்த புளிக் கரைசலை ஊற்ற வேண்டும். இந்த நேரத்தில் சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளவும்.
புளிச்சாறு கொதித்து கெட்டியாகும் வரை இதனை கலக்கி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். மேலும் வேர்க்கடலையை சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விட வேண்டும். இந்த சமயத்தில் ஒரு பெரிய அகலமான தட்டினை எடுத்து அதில் உதிர்ந்த சாதத்தை போட வேண்டும். அவை ஆறிய பின்னர் நாம் செய்து வைத்திருக்கும் புளிச்சாரை அதில் ஊற்றி கிளறி விடவும். மேலும் இதன் மேல் தாளித்து ஊற்ற வேண்டும் அதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து இந்த கலவையின் மேல் ஊற்ற வேண்டும். மேலும் நாம் வறுத்து அரைத்து வைத்திருக்கின்ற மிளகாய் பொடியையும் இதில் சேர்த்து கலக்க வேண்டும். சுவையான புளி சாதம் தயார். இதனுடன் உருளைக்கிழங்கு பொரியல் வடை துவையல் ஆகியவற்றை வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் இதனை செய்து எடுத்துச் செல்லலாம்.

டாபிக்ஸ்