கனா காணும் காலங்கள் புகழ் இர்ஃபான் மீண்டும் கம்பேக் கொடுக்கிறாரா? அவரே சொன்ன தகவல்!

3 hours ago
ARTICLE AD BOX

கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து புகழ்பெற்ற இர்ஃபான் மீண்டும் சீரியலில் நடிக்கப்போவதாக கூறியிருக்கிறார். அவர் இதுகுறித்து பேசியதை முழுவதுமாக பார்ப்போம்.

கனா காணும் காலங்கள் மூலம் 90ஸ் பெண்களின் கனவு கண்ணனாக மாறியவர் இர்ஃபான். அந்த சீரியலுக்கு பின் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார். அதில் நடித்துக்கொண்டிருக்கும்போதே பாதியில் சீரியலை விட்டு வெளியேறினார். இவர் பட்டாளம், எதிர் வீடு, ரூ, பொங்கி எழு மனோகரா போன்ற பல படங்களில் நடித்தார். பின் சேரன் இயக்கி நடித்த ராஜாவுக்கு செக் படத்தில் வில்லனாக நடித்தார்.

அதன்பின் பல காலம் அவரை காணவில்லை. அப்போதெல்லாம் போன் உபயோகம் அவ்வளவாக இல்லாததால், இவர் குறித்து அவ்வளவாக வெளியே தெரியவில்லை. ஆகையால், வழக்கம்போல் புரளிகள் வந்தன. அதாவது இவர் சினிமாவை விட்டுவிட்டு சொந்த ஊருக்கே கிளம்பிவிட்டார் என்றெல்லாம் கூறினார்கள்.

பல காலம் கழித்து சமீபத்தில் முடிந்த கனா காணும் காலங்கள்  வெப் சீரிஸில் டீச்சராக மீண்டும் கம்பேக் கொடுத்தார். நினைத்த அளவு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், அதிலிருந்தும் மீண்டும் வெளியேறிவிட்டார். இப்படி அவ்வப்போது மட்டும் தலைகாட்டி வந்த இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் இதுகுறித்து பேசியிருக்கிறார்.

ஏற்கனவே ஒருமுறை இர்ஃபான், "நான் நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் வரவில்லை, இயக்குநராக வேண்டும் என்றே சினிமாவுக்கு வந்தேன். அதற்காக கோர்ஸ் எல்லாம் போனேன். அந்த சமயத்தில்தான் எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது முடிந்தவுடன் பட வாய்ப்பு பல வந்தாலும், சரியாக எதுவும் எனக்கு அமையவில்லை.

ஒருமுறை படம் இயக்கக்கூட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதுவும் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது." என்று பேசினார்.

தற்போது பரவி வரும் வதந்தி குறித்து விளக்கம் அளித்த அவர், நான் என் சொந்த ஊரான திண்டுக்கலுக்கு போய் குடும்ப பிஸினஸ் எல்லாம் பார்க்கவில்லை. நான் சென்னையில் தான் இருக்கிறேன். சினிமாவை எப்படி விட்டுட்டு போவேன். வெற்றியோ? தோல்வியோ? கடைசிவரை முயற்சியை கைவிடக்கூடாது என்ற முடிவில் இருக்கிறேன்.

சினிமாவில் ஆர்வம் இருந்ததால், சீரியல் பக்கம் போகவில்லை. ஒருவேளை சீரியலில் இருந்தால், சினிமா வாய்ப்பு போய்விடுமோ என்று அஞ்சினேன். ஒரு சில நேரத்தில் நாம் எடுக்கும் முடிவு ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் மாற்றிக்கொள்ள வேண்டும். அதுதான் இப்போது சீரியல் பண்ணலாம் என்று நினைக்கிறேன். ஆகையால், சீரியல் முதல் சினிமா வரை செல்லலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். விரைவில் சீரியல் குறித்தான அறிவிப்பு வெளியாகும்.” என்று பேசியிருக்கிறார்.
 

இதையும் படியுங்கள்:
உலகின் அதிசய இடங்கள் - செங்குத்தாக எழுந்து நிற்கும் 24 மெடியோரா (MATEORA) பாறைகள்!
Irfan
Read Entire Article