ARTICLE AD BOX
சென்னை: கனமழையை எதிர்கொள்ள 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை கடிதம் எழுதியுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வருகிற 3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களில் இன்று, நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில்; கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மாவட்டத்தின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நெல்கொள்முதல் நிலையங்களில் இருக்கும் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
The post கனமழை எச்சரிக்கை: 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் appeared first on Dinakaran.