கண்மாயில் மூழ்கி 2 சிறுமிகள் பலி: தலா ரூ.3 லட்சம் நிதி முதல்வர் அறிவிப்பு

4 days ago
ARTICLE AD BOX

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஆழிமதுரை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் இதே கிராமத்தைச் சேர்ந்த குமார் மகள் சோபியா (8), மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். கண்ணன் மகள் கிஷ்மிதா (5) அருகில் உள்ள அங்கன்வாடியில் படித்து வந்தார். நேற்று பிற்பகல் 2 சிறுமிகளும் பள்ளி அருகில் உள்ள கண்மாய்க்கு சென்று நீரில் இறங்கியவர்கள் உள்ளே மூழ்கினர். தகவலறிந்த கிராமத்தினர் கண்மாயில் இறங்கி சிறுமிகளின் சடலங்களை மீட்டனர்.

இதையடுத்து ெபற்றோர் மற்றும் கிராமத்தினர் சுமார் 3 மணி நேரம் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை எஸ்பி ஆஷிஷ் ராவத் பேச்சுவார்த்தைக்குப்பின் போராட்டம் கைவிடப்பட்டது. ஆசிரியை சஸ்பெண்ட்: சிறுமிகள் பலியானதை தொடர்ந்து, பள்ளி ஆசிரியை தாய்மேரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிறுமிகள் இறந்த தகவலறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு, 2 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.3 லட்சம் முதல்வர் பொதுநிவாரண நிதியில் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

The post கண்மாயில் மூழ்கி 2 சிறுமிகள் பலி: தலா ரூ.3 லட்சம் நிதி முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article