ARTICLE AD BOX
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தச்சனேந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் முத்துப்பாண்டி. கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். வியாரின் மகள் யோகா பிரதீபா.
முத்துபாண்டிக்கும் - ப்ரதீபாவுக்கும் இடையே சமீபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணத்திற்கு பின் மகிழ்ச்சியாக தம்பதிகள் வாழ்ந்து வந்தனர்.
இதையும் படிங்க: மனைவியை எரித்துக்கொன்று நாடகமாடிய கணவன்.. விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்.!
தினமும் கொடுமை
இதனிடையே, முத்துப்பாண்டி, அவரின் தாய் ராமாயி, தந்தை முருகன், பெரிய மாமனார் - மாமியார் மகன் சதீஷ் ஆகியோர் சேர்ந்து ப்ரதீபாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளனர்.
மேலும், தினமும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்த கொடுமைகளை தாங்க இயலாத பெண்மணி, சம்பவத்தன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்தார்.
இதனால் மருத்துவ சிகிச்சைக்காக மதுரையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து அ. முக்குளம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணம் செய்த 2 மாதத்தில் பிரிவு, 4 மாதத்தில் தற்கொலை.. பெண்ணின் வாழ்க்கையை முடித்த காதல்..!