ARTICLE AD BOX
கடைசி வரைக்கும் மிதமான மழைக்கும், லேசான மழைக்கும் வித்தியாசம் சொல்லாமலே கிளம்பிட்டாரே!
சென்னை : சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், தென் மாவட்டங்களில் மழை பெய்து குளுகுளுவென இருப்பதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மே மாதம் அடிப்பது போன்ற வெயில் இப்போதே ஆரம்பித்து விட்டது என சென்னை மக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். ஏனென்றால் அந்தளவுக்கு பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது. இரவிலும் கொஞ்சம் கொஞ்சமாக குளிர் குறைந்து விட்டது. இப்பவே இப்டினா மே மாதமெல்லாம் என்ன செய்யப் போகிறோம் என சென்னை மக்கள் பீல் பண்ணிக் கொண்டிருக்க, இதற்கு நேரெதிராக, தென்மாவட்டங்களில் மழை குளுகுளுவென பெய்து வருகிறது.
நாளையும் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மழை, வெயிலோடு, வானிலை ஆய்வு மையத் தலைவரான பாலச்சந்திரன் ஓய்வு பெற்று, அமுதா புதிய தலைவராக பதவி ஏற்றிருப்பதையும் மறக்காமல் தங்கள் மீம்ஸ்களின் சேர்த்துள்ளனர்.
ஏனென்றால் வானிலை ஆய்வு மையம் என்று ஒன்று உள்ளதே, மழைக்காலங்களில் அவர்கள் தரும் அறிவிப்புகளை வைத்து, பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்கும் என மாணவர்கள் தொடங்கி, பெற்றோர் வரை எதிர்பார்க்கத் தொடங்கியதில்தான் இருந்துதான் ஊடகங்களிலும், சமூகவலைதளப் பக்கங்களிலும் பிரபலமானது.
அந்தவகையில் தற்போதும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து, வானிலையைப் போலவே வெயிலும், மழையும் கலந்து இணையத்தைக் கலக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











- முஸ்லீம் கணவர்.. என் குழந்தைகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஆவாங்கனு சொன்னாங்க! கண்ணீர் வடித்த பிரியாமணி!
- பெங்களூர் சாலையில் காதலியுடன் பைக்கில் உல்லாச பயணம்.. சிக்கிய சென்னை இளைஞர்.. சொன்ன காரணம் அல்டிமேட்
- ஸ்கார்ப்பா? ரெயின்கோட்டா? நல்ல சீட்டா எடுத்துப் போடு! இன்று தமிழக வானிலை நிலவரம் எப்படி இருக்கும்?
- LPG Cylinder Price: வர்த்தக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு! சென்னையில் ரூ.5.50 கூடுதல்!
- இனி குறைந்த விலையில் ஏர்போர்ட்டில் ஜம்முனு சாப்பிடலாம்! ரூ.10 போதும்.. கலக்கும் சென்னை விமான நிலையம்
- திருச்சி டூ சென்னை.. மிக்ஸியை பார்த்ததுமே ஆடிப்போன ஆபீசர்ஸ்.. கிட்ட போனால் தங்கமோ தங்கம்.. பரபரப்பு
- 10 மாவட்டங்களில் இன்று கனமழை பிச்சு உதறப்போகுது.. வானிலை மையம் விடுத்த அலர்ட்!