கடைசி நேரத்தில் டெல்லி அணிக்கு வந்த சிக்கல்… இந்த வீரருக்கு 2 ஆண்டுகள் ஐபிஎல் விளையாட தடை!

7 hours ago
ARTICLE AD BOX

ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில், டெல்லி அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வீரரை இரண்டு ஆண்டுகள் தடை செய்திருக்கிறார்கள். இது அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி வரும் 22ம் தேதி முதல் கோலாகலமாக துவங்கப்போகிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் இந்த தொடரானது பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக்கொண்டு, மீதி வீரர்களை வெளியேற்றினார்கள். பின் ஏலத்தில் தனக்கு தேவையான வீரர்களை ஒவ்வொரு அணியும் வாங்கிக்கொண்டது.

இப்படி இருக்க, அனைத்து அணிகளின் கேப்டன்கள் அறிவிக்கப்பட்ட பின்னரே, கடைசியாகதான் டெல்லி அணியின் கேப்டன் யாரென்று அறிவிக்கப்பட்டது. டெல்லி அணிக்கான புது கேப்ட அக்ஸர் பட்டேல்.

ஏற்கனவே டெல்லி அணி அனைத்து முடிவுகளையும் பார்த்து நிதானமாக எடுத்து பொருமையாக அறிவித்து வருகிறது. இந்தநிலையில்தான் டெல்லி அணியில் வாங்கப்பட்ட ஒரு வீரரால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஹாரி புரூக் டெல்லி அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். ஆனால் திடீரென இந்த ஆண்டுஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால், அவருக்கு ஐபிஎல்  தொடரில் விளையாட இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஏனெனில், ஒரு சில மாதங்களுக்கு முன்னர் கூறினால் கூட, வேறு யாரையாவது அணியில் மாற்றுவீரராக சேர்த்திருக்கலாம். ஆனால், கடைசி நேரத்தில் வர இயலவில்லை என்று கூறியது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், டெல்லி அணியால் கடைசி நேரத்தில் மாற்று வீரரை தயார் செய்ய முடியாது. இது அந்த அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் அணி நிர்வாகம் இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்காக ஹாரி புரூக் 4 கோடி ரூபாய்க்கு தேர்வு செய்யப்பட்ட நிலையிலும், திடீரென அந்த அணியிலிருந்து விலகினார். அதேபோல், தற்போது டெல்லி அணிக்காக 6.25 கோடி ரூபாய்க்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீண்டும் திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதனால்தான் பிசிசிஐ இந்த அதிரடி அறிவிப்பை அறிவித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்... அப்படீன்னா?
Delhi capitals
Read Entire Article