ARTICLE AD BOX
கடைகளில் வாங்கும் முட்டை நல்ல முட்டையா..?? இல்லை கெட்ட முட்டையா..?? என்பதை சோதிப்பது எப்படி..??
முட்டை அதிக அளவு ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பொருள். இந்த முட்டையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஏராளமான பயன்களை நாம் பெற முடியும். இந்நிலையில், கடைகளில் முட்டை வாங்கும் போது அவை நல்ல முட்டையா இல்லை கெட்டுப் போன முட்டையா என்பதை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என்பதை பார்க்கலாம். ஆனால் அனைத்து கடைகளிலும் இவ்வாறு பரிசோதித்து வாங்குவது என்பது தற்போது உள்ள நிலையில் சாத்தியமில்லாத ஒன்றுதான். இருப்பினும் நீங்கள் வீட்டில் வந்த அந்த முட்டையை நல்ல முட்டையா இல்லை கெட்ட முட்டையா என்பதை பரிசோதித்து பின்பு சாப்பிடுங்கள். அதை எப்படி சரி பார்ப்பது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி முட்டையை மெதுவாக வைத்தால் அது மூழ்கி அடி மட்டத்திற்கு சென்று விடும். இந்த பட்சத்தில் அந்த முட்டை நல்ல முட்டை சாப்பிடலாம். ஆனால் நீரில் மூழ்காமல் மிதந்து கொண்டிருந்தால் அந்த முட்டை கெட்டுப் போன முட்டை அதை ஒருபோதும் சாப்பிட்டு விடாதீர்கள். அது மட்டும் இல்லாமல் ஒரு சில கடைகளில் முட்டை வாங்குவது முட்டையின் மேல் ஒரு துர்நாற்றம் அடிக்கும் அப்படி துர்நாற்ற வாசனை வந்தால் அந்த முட்டையை வாங்காதீர்கள்.