கடுப்பேத்தும் சூழலிலும் கம்முன்னு இருந்து, மன அமைதியை பாதுகாக்க சூப்பரான வழிகள்

2 hours ago
ARTICLE AD BOX

நாம் வாழும் உலகம் பலவிதமான அனுபவங்களின் கலவையாகும். சில தருணங்களில் மகிழ்ச்சி, வெற்றி, திருப்தி அடைகிறோம். ஆனால் பல  சமயங்களில் தோல்வி, ஏமாற்றம், மனச்சோர்வு ஆகியவற்றை எதிர்கொள்கிறோம். இத்தகைய சிரமமான தருணங்களில் மனதை சமநிலையிலும், அமைதியாகவும் வைப்பது மிகவும் அவசியம். சூழ்நிலை எப்படி மாறினால் நம்முடைய மனதை எப்போதும் அமைதியாக வைத்திருப்பது என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

மனதை எப்போதும் அமைதியாக வைக்க வழிகள் :

1. மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) :

* மூச்சுக் பயிற்சி என்பது உடல் மற்றும் மனதின் ஒருங்கிணைப்புக்கு உதவுகிறது.
* மெதுவாக மூச்சை இழுத்து, விட்டு, சீராக ஈர்ப்பு கொடுங்கள்.
* நாடிப் சோதனை மூச்சுப் பயிற்சி செய்து பாருங்கள்.
* அழுத்தமான சூழ்நிலையில், மூச்சை கட்டுப்படுத்துவதன் மூலம் மனஅமைதி பெறலாம்.

2. தியானம் செய்வது : 

* தியானம் மனதை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது.
* தினந்தோறும் 10-15 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து தியானம் செய்யுங்கள்.
* மனதை தூய்மையாக வைத்து, ஒரே நினைவில் நிலைத்திருப்பது பயனளிக்கும்.
* "ஓம்" ஜெபம் அல்லது சாதாரண மூச்சு கவனிப்பு (Mindful Breathing) பயிற்சி மேற்கொள்ளலாம்.

3. வாக்கிங் :

* நிதானமான நடைப்பயிற்சி மனச்சோர்வை குறைக்கும்.
* கடலோரம் அல்லது பூங்காவில் அமைதியாக வாக்கிங் செல்வத நிச்சயம் பலன் அளிக்கும்.
* பசுமை சூழலில் நேரம் செலவிட்டால், மனதை புத்துணர்வாக மாற்றும்.

4. நேர்மறை சிந்தனைகளை வளர்த்தல் :

* தவறுகளை விட, தீர்வுகளை தேடுங்கள்.
* "இது ஒரு அனுபவம்" என்று தோல்விகளை பார்க்கவும்.
* நேர்மறை வாசகங்களை தினசரி சொல்லுங்கள் .
* "நடப்பதெல்லாம் நல்லதிற்காகவே நடக்கிறது." என நேர்மறையான பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

5. உணவு மற்றும் உடல் ஆரோக்கியம் பாதுகாத்தல் :

* சரியான உணவுகளை உட்கொள்ளுங்கள் – இயற்கை உணவுகள், அதிகமான நீர்.
* உடற்பயிற்சி, யோகா செய்து, உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும்.
* தூக்கம் போதுமான அளவில் பெறுவது அவசியம்.

6. புத்தகங்கள் வாசித்தல் :

* மனப்போக்கு மற்றும் அறிவை மேம்படுத்த, நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும்.
* ஆன்மீக நூல்கள், தன்னம்பிக்கையை வளர்க்கும் புத்தகங்கள் பயனளிக்கும்.

7. குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் உரையாடுதல் :

* உங்கள் பிரச்சினைகளை நம்பகமானவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* உள்ளங்கையில் வைக்காமல், பகிர்ந்தால் மனச்சுமை குறையும்.

8. கலை மற்றும் பிரியமான செயல்களில் ஈடுபடுதல்: 

* நிறைவான ஒரு கலைநிகழ்வில் ஈடுபடுங்கள் – ஓவியம், இசை, வாசிப்பு, அல்லது எழுத்து.
* புதிய நுட்பங்களை கற்றுக் கொள்வது மனதை புத்துணர்வாக மாற்றும்.

9. துணிவுடன் இருப்பது :

* "எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு இருக்கும்" என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
* ஒரு கட்டத்தில் பிரச்சினைகள் குறைந்து விடும் – பயம் தேவை இல்லை.

10. கடவுளின் மீது நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்வது

* கடவுளை தியானித்து, அவரிடம் எல்லா பிரச்சினைகளையும் சமர்ப்பிக்கலாம்.
* நம்பிக்கை வைத்திருந்தால், மனதிற்கு அமைதி கிடைக்கும்.

Read Entire Article