ARTICLE AD BOX
திருவொற்றியூர்: காசிமேடு சிங்காரவேலர் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் குமார் (60). நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் மீன் பிடிக்கச் சென்றபோது நிலை தடுமாறி குமார் கடலில் விழுந்துள்ளார்.
இதில் நீரில் மூழ்கிய அவர் பழைய ஏலம் விடும் இடத்தில் சடலமாக மிதந்ததை மீனவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாப பலி appeared first on Dinakaran.