கடற்கரை - தாம்பரம் தடத்தில் ஏசி மின்சார ரயில் சோதனை

1 day ago
ARTICLE AD BOX

Published : 25 Feb 2025 05:35 AM
Last Updated : 25 Feb 2025 05:35 AM

கடற்கரை - தாம்பரம் தடத்தில் ஏசி மின்சார ரயில் சோதனை

சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்ட ஏசி மின்சார ரயில்.
<?php // } ?>

சென்னை: சென்னை ஐ.சி.எப். ஆலையில், தெற்கு ரயில்​வேக்கான முதல் ஏசி மின்சார ரயில் பிப்​ரவரி முதல் வாரத்​தில் தயாரானது. 12 பெட்​டிகள் கொண்ட இந்த ஏசி மின்சார ரயில், சென்னை ரயில் கோட்​டத்​தில் அண்மை​யில் ஒப்படைக்​கப்​பட்​டது. இந்த ரயிலில் அமர்ந்​தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடி​யும்.

அதிகபட்​சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்​தில் செல்​லும் திறன் கொண்​டது. தானி​யங்கி கதவு​கள், ஜி.பி.எஸ். அடிப்​படையிலான தகவல் வசதி மற்றும் அறிவிப்பு வசதிகள் உள்ளன. அனைத்து ரயில் பெட்​டிகளி​லும் சிசிடிவி கேமராக்கள் இருக்​கும். இந்த ரயில் தாம்​பரம் யார்​டில் நிறுத்​தப்​பட்டு, சோதனை செய்​யப்​படு​கிறது.

இந்நிலை​யில், சென்னை கடற்கரை - தாம்​பரம் தடத்​தில் உள்ள விரைவு பாதை​யில், ஏசி மின்சார ரயில் மணிக்கு 60 கி.மீ. வேகத்​தில் இயக்கி சோதனை நடத்​தப்​பட்​டது. தொழில்​நுட்பம் மற்றும் பாது​காப்பு பிரிவு அதிகாரிகள் பயணம் செய்து, பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்​கொண்​டனர். சோதனை ஓட்டம் திருப்தியாக இருந்ததாகவும் ரயில் சேவை விரைவில் தொடங்கும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article