ARTICLE AD BOX
கடன் வாங்குபவர்கள் முதல் கட்டுமானதாரர்கள் வரை நாட்டின் நிதிசார் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு குறித்த நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடன் பெற்றவர்கள் முதல் கட்டுமானதாரர்கள் வரை நாட்டின் நிதிசார் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு குறித்த அறிக்கையை நிதி ஆயோக் இன்று வெளியிட்டுள்ளது. நிதி ஆயோக் தலைமைச் செயல் அலுவலர் பி.வி.ஆர்.சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் கடன் பெற விரும்புவதாகவும் தங்களது கிரெடிட் ஸ்கோரை கண்காணிப்பதாகவும் தெரியவந்துள்ளது. 2024 டிசம்பர் நிலவரப்படி, 27 மில்லியன் பெண்கள் தங்கள் கடனை கண்காணித்து வந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 42% கூடுதலாகும். டிரான்ஸ்யூனியன் சிபில், நிதி ஆயோக்கின் பெண்கள் தொழில்முனைவோர் தளம் மற்றும் மைக்ரோசேவ் கன்சல்டிங் ஆகியவை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இந்த வெளியீட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றிய நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி; பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதில் நிதிசார் நடவடிக்கைகள் முக்கியப் பங்கு வகிப்பதை எடுத்துரைத்தார். பெண் தொழில்முனைவோருக்கு நிதியுதவி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்கிறது. நிதி, கல்வியறிவு, கடன் பெறுவதற்கான அணுகுமுறை, வழிகாட்டுதல், சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய சூழல் அமைப்பை உருவாக்குவதில் பெண் தொழில்முனைவோர் பிளாட்ஃபார்ம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இருப்பினும், சம அளவில் நிதியுதவி கிடைப்பதை உறுதி செய்வதற்கான கூட்டு முயற்சி அவசியமாகிறது.
பெண்களின் தேவைகளுக்கு ஏற்ப அனைவரையும் உள்ளடக்கிய நிதித் திட்டங்களை வடிவமைப்பதில் நிதி நிறுவனங்களின் பங்கு, கட்டமைப்புத் தடைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான கொள்கை முன்முயற்சிகள் ஆகியவை நிதியுதவி விரைவாக கிடைப்பதற்கான கருவிகளாக அமையும் என்று அவர் கூறினார். பெண் தொழில்முனைவோர் பிளாட் ஃபார்ம் திட்டத்தின் கீழ் இந்த இலக்கை அடைய மகளிர் கூட்டமைப்புக்கான நிதியுதவி ஒத்துழைப்பு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
நிதி ஆயோக்கின் முதன்மை பொருளாதார ஆலோசகரும், டபிள்யூஇபி மிஷன் இயக்குநருமான அன்னா ராய் கூறுகையில், பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பது, நாட்டின் தொழிலாளர் தொகுப்பில் நுழையும் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறையாகும். இது சமமான பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான ஒரு சாத்தியமான உத்தியாகவும் செயல்படுகிறது. பெண்களின் தொழில்முனைவை ஊக்குவிப்பதன் மூலம் 150 முதல் 170 மில்லியன் பேர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும், அதே நேரத்தில் தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க ஊக்குவிக்கவும் முடியும் என்றார்.
The post கடன் வாங்குவதில் பெண்களின் பங்களிப்பு குறித்த நிதி ஆயோக் அறிக்கை வெளியீடு…! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.