கடந்த கால ஐசிசி நாக் அவுட் தோல்விகளிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம்: விராட் கோலி

3 hours ago
ARTICLE AD BOX

கடந்த கால ஐசிசி நாக் அவுட் தோல்விகளிலிருந்து இந்திய அணி நிறைய கற்றுக்கொண்டதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்றுடன் (மார்ச் 9) நிறைவடைந்தது. துபையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி தோல்வி: நியூசி. கேப்டன் கூறியதென்ன?

252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பான தொடத்தைத் தந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 83 பந்துகளில் 76 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டனர்.

நாக் அவுட் தோல்விகள் கற்றுக்கொடுத்த பாடம்

மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்ற நிலையில், கடந்த கால ஐசிசி நாக் அவுட் தோல்விகளிலிருந்து இந்திய அணி நிறைய கற்றுக்கொண்டதாக விராட் கோலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்று பல ஆண்டுகள் ஆகின்றன. தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளோம். சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது எங்களது இலக்காக இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடினமான தொடருக்குப் பிறகு, சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி: பரிசளிப்பு விழாவுக்கு அழைக்கப்படாத பாகிஸ்தான் பிரதிநிதி!

இந்த தொடர் முழுவதுமே ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார்கள். கடந்த கால ஐசிசி தொடர்களின் முக்கியமான போட்டிகளில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், அந்த தொடர்களில் கிடைத்த அனுபவங்களிலிருந்து நாங்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டு இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளோம் என்றார்.

இந்திய அணி கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article