ARTICLE AD BOX
ரூ.1 லட்சம் டூ ரூ.5.46 கோடி... மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட அவந்தி ஃபீட்ஸ்..
அவந்தி ஃபீட்ஸ் நிறுவனம் இறால் தீவனங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக உள்ளது. மேலும் இந்நிறுவனம் இறால்களை பதப்படுத்தி ஏற்றுமதியும் செய்கிறது. ஐரோப்பா,ஜப்பான்,கொரியா,சீனா,ரஷ்யா,கனடா மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச சந்தைகளுக்கு இந்நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது. இந்நிறுவனம் வலுவான நிதி நிலை முடிவுகள் மற்றும் வர்த்தக வளர்ச்சியை கொண்டுள்ளதால் இந்நிறுவன பங்குகளுக்கு பங்குச் சந்தையில் நல்ல டிமாண்ட் உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சத்தை எட்டியது.
கடந்த வியாழக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே அவந்தி ஃபீட்ஸ் பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.821.15ஐ எட்டியது. வரும் நாட்களில் இப்பங்கின் விலை ஏற்றம் காண வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.842.90ஐ எட்டியது.

கடந்த 15 ஆண்டுகளில் 2018ம் ஆண்டு போனஸ் பங்குகளுக்கு பிறகு விலை சரிசெய்தலுக்கு பிறகு அவந்தி ஃபீட்ஸ் பங்கு முதலீட்டாளர்களுக்கு சுமார் 54,505 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. இதன்படி, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.5.46 கோடியாக பெருகியிருக்கும். கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 161 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த ஓராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 58.46 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இப்பங்கின் விலை 19 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இப்பங்கின் விலை 11 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை இப்பங்கின் விலை 22 சதவீதத்துக்கு அதிகரித்து ரூ.670.65லிருந்து ரூ.821.55ஆக உயர்ந்துள்ளது.
2024 டிசம்பர் காலாண்டில் அவந்தி ஃபீட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 86.5 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.135.2 கோடியாக உயர்ந்துள்ளது. அதிக லாப வரம்பு மற்றும் செயல்பாட்டு திறன் காரணமாக இந்நிறுவனத்தின் நிகர லாபம் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 9 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,365.8 கோடியாக உயர்ந்துள்ளது.