சூர்யா

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான கங்குவா திரைப்பட வசூல் ரீதியாக மிகப்பெரிய நஷ்டம் அடைந்தது. 1000 வருடத்திற்கு முந்தைய வரலாற்று கதை , பிரம்மாண்ட பட்ஜெட் , இரு வேடங்களில் சூர்யா என இப்படத்திற்கு பெரியளவில் பில்டப் கொடுக்கப்பட்டது. ஆனால் படமாக ரசிகர்களை திருப்திபடுத்த தவறியது கங்குவா.

தனது கரியரில் தொடர்ச்சியாக மாறுபட்ட கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருபவர் சூர்யா. இதில் சில முறை அவரது படங்கள் வெற்றியை சந்திக்காமல் போயிருக்கின்றன. சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ரெட்ரோ திரைப்படம் ரொமாண்டிக் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. அதேபோல் ஆர்.ஜே பாலாஜி இயக்கி வரும் சூர்யா 45 படமும் ஒரு ஆக்‌ஷன் என்டர்டெயின்மெண்ட் படம்தான். இந்த இரு படங்கள் மீதும் ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது.

மீண்டும் ஹிஸ்டரிகல் சப்ஜெக்ட்டில் சூர்யா

சூர்யா அடுத்தடுத்து நடிக்க இருக்கும் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படம் குறிப்பிடத் தக்கது. மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியகியுள்ளது. தொடர்ந்து இரு தெலுங்கு பட இயக்குநர்களுடன் சூர்யா இணைய இருப்பதாக கூறப்படுகிறது. லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா ஒரு பையோபிக் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தொடர்ந்து சந்து மொண்டெட்டி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

சாய் பல்லவி நடித்து சமீபத்தில் தெலுங்கில் வெளியான தண்டேல் திரைப்படத்தை இயக்கிய சந்து மொண்டெட்டி இயக்கத்தில் சூர்யா மீண்டும் ஒரு வரலாற்று கதையில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை 300 வருடத்திற்கு முன்பு நடந்த கதை என்றும் இந்திய வரலாற்று மற்றும் கலாச்சார பெருமையைப் பேசும் படமாக இந்த படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. கங்குவா மாதிரியான ஒரு பெரிய பட்ஜெட் படத்தின் தோல்வியில் இருந்து மீளும் சூர்யா மீண்டும் ஹிஸ்டரிகல் சப்ஜெக்ட்டில் நடிப்பது கொஞ்சம் ரிஸ்க் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.