ARTICLE AD BOX

ஓவராக பேசிய ஸ்ருதியின் அம்மாவுக்கு முத்து பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வித்யா மற்றும் முருகன் இருவரும் கோவிலில் சந்தித்து மீனா சொன்னது போல் பிடித்த விஷயம் பிடிக்காத விஷயம் எழுதி இருவரும் கொடுத்து படித்துப் பார்க்க, வித்யா எழுதிக் கொடுத்ததில் பாதி ஓகே இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சம் மாத்தணும் உங்களுக்காக நான் அதை மாத்திக்கிறேன் என்று சொல்லுகிறார். நான் எழுதிக் கொடுத்தது உங்களுக்கு ஓகேவா என்று கேட்க நீங்களே விட்டுக் கொடுக்கும் போது எனக்கும் ஓகே தான் என்று சொல்லுகிறார். அடுத்து என்னங்க பண்றது என்று ஆவலோடு கேட்க கேட்டு சொல்றேன் யார்கிட்ட என்று கேட்க என் மனசாட்சி கிட்ட என்று சொல்லிவிட்டு தனியாக வந்து மீனாவுக்கு போன் பண்ணுகிறார்.
பிறகு நீங்க சொன்ன மாதிரி லெட்டர் எழுதி கொடுத்து மாத்திகிட்டோம் கொஞ்சம் விஷயம் சின்க் ஆகல ஆனா மாத்திக்கிறேன்னு சொல்லிட்டாரு என்று சொல்ல அப்போ சந்தோஷம் உங்களுக்கு ஓகேவா என்று கேட்க விட்டுக் கொடுத்து போறேன்னு சொல்லிட்டாரே என்று சொல்லுகிறார் அவர் மட்டும் விட்டுக்கொடுத்து போக கூடாது நீங்களும் கொஞ்சம் எடத்துல விட்டுக் கொடுத்து போகணும், இப்போ நான் லவ்வ சொல்லிடவா என்று கேட்கிறார். வேணாம் வெயிட் பண்ணுங்க அவர் வாயாலே சொல்லட்டும் லவ்ல மட்டும் அவசரப்படக்கூடாது என்று சொல்லி போனை வைக்க வித்யா முருகனிடம் வர அடுத்து என்ன பண்ணனும் ஓகேவா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல சாமி கும்பிடலாம் என அழைத்து சென்று விடுகிறார்.
மறுபக்கம் ஸ்ருதியின் அம்மா கோபமாக வீட்டுக்கு வந்து என் பொண்ண வேலைக்கு அமைச்சு தான் இந்த வீட்டில் சமாதிக்கணுமா, அவளை நாங்க எப்படி வளத்திருக்கும் தெரியுமா ஏற்கனவே அவ டப்பிங் போறது எங்களுக்கு புடிக்கல, அவ ஆசைக்காக அவங்க அப்பா சம்மதிச்சாரு ஆனா இப்போ ரெஸ்டாரன்ட்ல வேலை பாத்துட்டு இருக்கா அத பார்க்கும்போது எனக்கு வயித்தெரிச்சலா இருக்கு. இது பேங்க் செக் ஸ்ருதி அப்பா கொடுத்தாரு இதுல எவ்வளவு வேண்டும் என்றாலும் ஃபில் பண்ணிக்கோங்க என்று டேபிள் மீது வைத்துவிட்டு என் பொண்ணு அந்த வேலைக்கு போக கூடாது என்று சொல்லுகிறார்.
அதற்கு அண்ணாமலை எங்க வீட்ல மூணு மருமகள் இருக்காங்க யார்கிட்டயும் நாங்க வேலைக்கு போ சம்பாதிச்சு கொடு என்று சொன்னது கிடையாது எங்க பசங்க சம்பாதிக்கிறது வீட்டு செலவு குடுப்பாங்க அதே மாதிரி சுருதி இந்த வேலைக்கு போனதுக்கு எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது அது சுருதி எடுத்த முடிவு நீங்க இப்ப போனீங்களா ஸ்ருதி கிட்ட சொல்ல வேண்டியது தானே வேணாம்னு சொல்லி என்று சொல்ல ஏங்க அவ சொன்னா கேக்குறா என்று சொல்லுகிறார். என் பொண்ணு சம்பாதிச்சு இந்த வீட்டுக்கு கொடுக்கணும்னு அவசியம் இல்ல இந்த செக்ல நீங்க எவ்வளவு வேணாலும் எழுதிக்கோங்க என்று மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்க அப்படியா என்று முத்து செக்கை எடுத்து எழுத ஆரம்பிக்கிறார் 500 ரூபாயில் ஆரம்பித்து 5 ஐந்து கோடி 50 கோடி, 500 கோடி என போட்டுக் கொண்டே போக ஸ்ருதியின் அம்மா பயத்தில் யோசிக்கிறார். உடனே முத்து அந்த செக்கை எடுத்துக்கொண்டு நான் போய் பணம் எடுத்துட்டு வந்துறேன் என்று போக வேக வேகமாக நிறுத்த சொல்லுகிறார். நீங்க தானே எவ்வளவு வேணா எடுத்துக்க சொன்னீங்க இப்ப எதுக்கு தடுக்குறீங்க என்ற கேட்க உடனே முத்து செக்கை கெடுத்து விட்டு இந்த பணத்தில் தான் எங்க அப்பா இருக்கணும்னு அவசியம் இல்ல நீங்க அவரை பேசறது முதல்ல நிறுத்துங்க என்று சொல்லி செக்கை கிழித்து போடுகிறார்.
ஆனால் ஸ்ருதியின் அம்மா ஓவராக பேசிக்கொண்டே போக அண்ணாமலை டென்ஷன் ஆகி போதும் நிறுத்துங்க நீங்க இந்த வீட்டோட சம்பந்தி என்றதுனால தான் பொறுமையா பேசிக்கிட்டு இருக்கோம் நீங்க அளவுக்கு மீறி பேசிகிட்டு இருக்கீங்க என்று சொல்ல உடனே விஜயாவிடம் இந்த வீட்ல நீங்க தான் நேர்மையா நடந்துப்பீங்க நீங்களாவது ஸ்ருதி கிட்ட வேலைக்கு போகக்கூடாது என்று சொல்லக்கூடாதா என்று சொல்ல உங்க பொண்ணு உங்க பேச்சை கேட்கல என் பேச்சு எங்க கேக்க போற என்று சொல்ல உடனே ஸ்ருதி அம்மா நான் உங்க மாப்பிள்ளைக்கு ஒரு ரெஸ்டாரன்ட் வச்சு கொடுக்கிறோம் அவங்க ரெண்டு பேரும் அங்க வேலை பண்ணா ஓகே தான் என்று சொல்ல விஜயாவும் நான் இதை பத்தி ரவி கிட்ட பேசுறேன் என சொல்லுகிறார் ஆனால் அண்ணாமலை இது ரவி ஸ்ருதி எடுக்க வேண்டிய முடிவு என்று சொல்ல அவங்க சின்ன பசங்க அவங்களுக்கு தெரியாது நம்ப தான் சொல்லணும் என சொல்லுகிறார். உடனே சுருதியின் அம்மா ஸ்ருதி சர்வர் வேலைக்கு போகக்கூடாது அவ்வளவுதான் என்ன சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
அருண் மற்றும் சீதா இருவரும் கோவிலுக்கு வர அதே கோவிலில் வித்யா மற்றும் முருகன் இருக்கின்றனர். பிறகு என்ன நடக்கிறது? சீதா வித்யாவை பார்க்கிறாரா? முருகன் அருண் இடம் என்ன பேசுகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

The post ஓவராக பேசிய ஸ்ருதியின் அம்மா, முத்து கொடுத்த பதிலடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.