ARTICLE AD BOX
ஓரே ஆண்டில் 100 சதவீதம் உயர்ந்த பங்கு.. லாபம் ஈட்டுவதில் ஜூன்ஜூன்வாலாவை மிஞ்சும் மனைவி..
பங்குச் சந்தையில் பிரபலமான முதலீட்டாளர்களில் ஒருவர் ரேகா ஜூன்ஜூன்வாலா. இவர் வேறு யாருமில்ல, இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்பட்டவரும், பிரபல முதலீட்டாளருமான மறைந்த ஜூன்ஜூன்வாலாவின் மனைவிதான் இவர். 2022 ஆகஸ்ட் மாதத்தில் உடல் நலக்குறைவு காரணமாக ஜூன்ஜூன்வாலா மறைந்தார். இதனையடுத்து அவர் வசம் மதிப்புமிக்க பங்குகளின் போர்ட்போலியா ரேகாவுக்கு கிடைத்தது. ஜூன்ஜூன்வாலாவின் போர்ட்ஃபோலியாவில், அதிகபட்சமாக டாடா குழுமத்தின் டைட்டன் கம்பெனி பங்குகள் உள்ளன.
நிறுவன பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்வதில் கணவருக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர் அல்ல ரேகா ஜூன்ஜூன்வாலா. உதாரணமாக, ரேகா ஜூன்ஜூன்வாலாவின் போர்ட்போலியாவில் உள்ள பங்குகளில் ஒன்று ஒரே வருடத்தில் 100 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. அந்த நிறுவன பங்கு வா டெக் வாபேக். ரேகா ஜூன்ஜூன்வாலாவின் போர்ட்போலியாவில் இ்ந்நிறுவன பங்கு 7வது அதிக பங்கினை கொண்ட பங்காக உள்ளது. வா டெக் வாபேக் நிறுவனத்தின் ரூ.717 கோடி மதிப்பிலான 50 லட்சம் பங்குகளை அவர் வைத்துள்ளார்.

வா டெக் வாபேக் நிறுவனம் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் அமைத்தல் போன்ற நீர் மேலாண்மை தீர்வுகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி சிறப்பாக உள்ளது. கடந்த மாதம் கூட சவுதி அரேபியாவிலிருந்து பெரிய ஆர்டரை பெற்றதாக அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது. 2024 மார்ச் 14ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் 52 வார குறைந்த அளவான ரூ.650.05க்கு சென்றது. ஆனால் அதன் பிறகு இந்நிறுவன பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் காண தொடங்கியது. 2024 டிசம்பர் 12ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.1,943.95ஐ எட்டியது.
கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 100 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 343 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 343 மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் வா டெக் வாபேக் பங்கின் விலை 560 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.68 சதவீதம் குறைந்து ரூ.1,424.75ஆக இருந்தது.
Story written by: Subramanian