ஓடிடிக்கு ஓடிவரும் ‘விடாமுயற்சி’... எப்போ வருது தெரியுமா?

1 day ago
ARTICLE AD BOX

இயக்குனர்கள் செல்வராகவன், கௌதம் மேனன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த மகிழ் திருமேனி தடையறத் தாக்க, மீகாமன், தடம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவரது இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட திரைப்படம் தான் ‘விடாமுயற்சி’.

பரபரப்பூட்டும் அதிரடி காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பாக சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்தார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இந்த படத்தில் நடிகர் அஜித்குமார் கதாநாயகனராக மிரட்டி இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு படத்திற்கு பின் இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு வெளியான திரைப்படம் தான் ‘விடாமுயற்சி’.

இதையும் படியுங்கள்:
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!
விடாமுயற்சி

இவர்களுடன் அர்ஜுன், ரெஜினா, ஆரவ், விஜய் ரம்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பெரும் பகுதிகள் பசுமை நிறைந்த, கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டுள்ளன. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்த இப்படத்திற்கு நிரவ் ஷா, ஓம் பிரகாஷ் ஆகியோர் ஒளிப்பதிவும், என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் என்று ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் சற்று தாமதமாக கடந்த பிப்ரவரி 6-ந்தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் முதல் நாளில் மட்டும் ரூ.34 கோடி வசூல் செய்த நிலையில் அடுத்தடுத்த நாட்களிலும் வசூலை குவித்து வருகிறது. 1997-ம் ஆண்டு வெளியான பிரபல அமெரிக்க படமான ‘பிரேக் டவுன்’ படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் உலக அளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
விடாமுயற்சி அஜித்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய 7 வாழ்க்கைப் பாடங்கள்!
விடாமுயற்சி

இந்த நிலையில், ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் விடாமுயற்சி தற்போது ஓ.டி.டி ரிலீஸ் ஆக உள்ளது. விடாமுயற்சி படத்தை ஓ.டி.டியில் ரசிகர்கள் பார்த்து ரசித்து கொண்டாடும் வகையில் அடுத்த மாதம் மார்ச் 3-ந்தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டருக்கு சென்று நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படத்தை பார்த்து ரசிக்க முடியாதவர்கள் வரும் 3-ம்தேதி முதல் வீட்டில் இருந்தபடியே கண்டுகளிக்கலாம்.

அஜர்பைஜானின் பிரமிக்க வைக்கும் பின்னணியில் அமைக்கப்பட்ட இத்திரைப்படத்தின் கதை, திருமணமான ஜோடியான அர்ஜுன் (அஜித் குமார்) மற்றும் அவரது மனைவி கயல் (திரிஷா) ஆகியோரைச் சுற்றி வருகிறது. இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆன நிலையில் விவாகரத்து செய்யும் தருவாயில், விடுமுறைக்கு அஜர்பைஜானில் செல்லும் போது கயல் ஒரு மோசமான கும்பலால் கடத்தப்படுகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் மனைவி கயலை, அர்ஜுன் (அஜித்குமார்) பல்வேறு முரண்பாடுகளையும் எதிர்கொண்டு, மீட்பதற்காக ஆபத்தான பயணத்தை மேற்கொள்வது தான் கதை.

இதையும் படியுங்கள்:
2 ஆண்டுகளுக்கு பிறகு ரீலிஸ் - அஜித்தின் 'விடாமுயற்சி'க்கு பலன் கிடைக்குமா?
விடாமுயற்சி

அஜித் குமார் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படம் வெளிவருவதற்கு முன் இருந்த எதிர்பார்ப்பும், உற்சாகமும் படம் வெளிவந்த பின்னர் பூர்த்தி செய்யவில்லை என்றே கூறவேண்டும்.

Read Entire Article