ஒளிவட்டம் தெரிகிறதே…கொல்கத்தா வானிலை எப்படி? லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

17 hours ago
ARTICLE AD BOX
Rain predicted

கொல்கத்தா : 18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.  இன்றயை முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தங்கள் சொந்த மைதானமான ஈடன் கார்டன்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டி இது என்பதால் போட்டிக்கு முன்னதாக பிரமாண்டமாக தொடக்க விழாவும் நடைபெறவிருக்கிறது. இந்த சூழலில் நேற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக திடீரென ஈடன் கார்டன் மைதானத்தில் லேசான மழை வந்தது.

சிறுது நேரம் பெய்துவிட்டு அதன்பிறகு நின்றுவிடும் என ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்த சூழலில், மேலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி குண்டை தூக்கிப்போடும் விதமாக இந்திய வானிலை ஆய்வு மையம் வரும்  ஞாயிறு வரை தெற்கு வங்காளத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவித்தது. மார்ச் 22 அன்று ஆரஞ்சு எச்சரிக்கையும், ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் எச்சரிக்கையும் வெளியிடப்பட்ட காரணத்தால் இன்று மழை பெய்தால் போட்டி நடைபெறுவது சந்தேகம் தான் எனவும் கூறப்பட்டது.

கொல்கத்தாவில் சனிக்கிழமை 74% மழை பெய்ய வாய்ப்புள்ளது மற்றும் 97% வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையில் மழைக்கான வாய்ப்பு 90% ஆக அதிகரிக்கும் என தெரிவித்திருந்த காரணத்தால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர். சோகத்துடன் நாளைக்கு மழை வரக்கூடாது என வேண்டிக்கொண்டிருந்த நிலையில், தற்போது ஈடன் கார்டன் மைதானத்தில் சூரிய ஒளி தெரிந்துள்ளது. தற்போது வானிலை தெளிவாக மாறியிருப்பதாகவும் அங்கிருப்பவர்கள் புகைப்படங்களை எடுத்து வெளியீட்டு வருகிறார்கள்.

நேற்றிலிருந்து இருந்த முகத்துடன் இருந்த வானம் இப்போது மெல்ல மெல்ல சூரிய ஒளியும் தெரிந்துள்ள காரணத்தால் போட்டி நடைபெறும் என்கிற எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. இருப்பினும் திடீரென மழை பெய்யும் வாய்ப்புகள் இருப்பதால் என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.மழை பெய்வது நின்ற காரணமாக வீரர்களும் பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டார்கள்.

Kolkata’s weather has cleared now. !!!#KKRvsRCB #KolkataWeather #IPL2025 #ipltickets #Cricket #Weatherupdate pic.twitter.com/sNBSsxlqTk

— Lalit yadav (@lalityadav65) March 22, 2025

UPDATE: We’ve added another bowler to our squad👀 pic.twitter.com/PQjaL3PUhQ

— KolkataKnightRiders (@KKRiders) March 22, 2025

Read Entire Article