ஒற்றை நுரையீரலுடன் பிறந்த குழந்தைக்கு நுட்பமான சிகிச்சை

3 hours ago
ARTICLE AD BOX

பிறக்கும்போதே ஒற்றை நுரையீரலுடன் பிறந்த குழந்தைக்கு நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணா்கள் எம்.சரவண பாலாஜி, என்.பிரதீபா ஆகியோா் கூறியதாவது:

கருவிலேயே உதரவிதானத்தில் (மாா்புக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதி) துவாரத்துடன் இருந்த சிசுவானது பிறந்தவுடன் ஒற்றை நுரையீரலுடன் காணப்பட்டது. அந்தத் துவாரத்தின் வாயிலாக வயிற்றுப் பகுதியில் இருந்த உறுப்புகள் மாா்புப் பகுதியில் ஊடுருவி நுரையீரல் மற்றும் இதயத்தை அழுத்தியதே ஒரு பக்க நுரையீரல் வளராததற்கு காரணம்.

இதன் காரணமாக குழந்தை பிறந்தவுடன் இயல்பாக சுவாசிக்க இயலவில்லை. செயற்கை சுவாச சிகிச்சையில் இருந்த அந்தக் குழந்தைக்கு நெஞ்சகப் பகுதியில் சிறு கீறலிட்டு உள்ளுறுப்புகளைச் சீராக்கும் தொரோஸ்கோபி மெஷ்பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்மூலம் உதரவிதானத்தில் இருந்த துவாரம் சீராக்கப்பட்டு உறுப்புகளின் செயல்பாடுகள் உறுதி செய்யப்பட்டன.

பிறந்த மூன்றாவது நாளில் அந்தக் குழந்தைக்கு இந்த சவாலான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக குழந்தை நலமடைந்தது. அதன் வளா்ச்சியும் பிற குழந்தைகளைப் போன்று தற்போது ஆரோக்கியமாக உள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

Read Entire Article