ARTICLE AD BOX
அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபரான டொனால்ட் டிரம்ப், ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். அவர் பேசும்போது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் கடுமையான அமளியில் ஈடுபட்டனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமளிக்கிடையே அதிபர் டிரம்ப் உரையாற்றினார்.
அதிபர் டிரம்ப் பேசுகையில், “அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நினைவாக்க உழைத்து வருகிறோம்.
நான் பதவியேற்ற சில மணி நேரங்களுக்குள், அமெரிக்காவின் தெற்கு எல்லையில் அவசரநிலையை பிரகடப்படுத்தினேன். நமது நாட்டின் மீதான படையெடுப்பைத் தடுக்க அமெரிக்க ராணுவத்தையும் எல்லைப் படையையும் நான் நிறுத்தினேன்.
இதன் விளைவாக, கடந்த மாதம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபரான ஜோ பைடனுடன் ஆட்சிக்காலத்தில், ஒரு மாதத்தில் லட்சக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்திருந்தனர்.” எனத் தெரிவித்தார்.