ARTICLE AD BOX
சென்னை: கோயில் திருவிழாக்களின் போது கோயில் வளாகத்திற்குள் இசைக்கச்சேரி நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரியில் உள்ள திருமலையராயன் பட்டினம் பகுதியில் உள்ள வீதி வரதராஜ பெருமாள் கோயில் திருவிழாவின் போது, கோயில் வளாகத்திற்குள் இசைக்கச்சேரி நடத்தப்பட்டது. அந்த கச்சேரியில் பக்தி பாடல்களை தவிர சினிமா பாடல்கள் அதிகமாக பாடப்பட்டது. இதை யாரும் கண்டுகொள்ளவில்லை.
எனவே, அந்த கோயிலுக்கு அறங்காவலரை நியமிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி, பரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், கோயிலுக்குள் பக்தி பாடல்கள் மட்டுமே பாட அனுமதி உண்டு. அறங்காவலர் நியமனம் தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக விளக்கமளிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, கோயிலுக்குள் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் பக்தி பாடல்களுக்கு மட்டுமே பாட அனுமதிக்க வேண்டும். பக்தி பாடல்கள் தவிர்த்து சினிமா பாடல்களை பாட அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
The post கோயில் இசை கச்சேரிகளில் சினிமா பாடல்களுக்கு அனுமதியில்லை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.