ஒரே நாளில் திமுக அமைச்சர், எம்.பி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை... பின்னணி என்ன?

3 hours ago
ARTICLE AD BOX

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று, தி.மு.க அமைச்சரின் நண்பர்கள் வீடுகளிலும், தி.மு.க எம்.பி-யின் நிறுவன அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. பணமோசடி வழக்கில் சிறையிலிருந்து ஓராண்டுக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்து மீண்டும் அமைச்சரான செந்தில்பாலாஜியின் நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அமலாக்கத்துறை

மறுபக்கம், சென்னை தியாகராய நகரில் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் அக்கார்ட் டிஸ்டில்லர்ஸ் அண்ட் பிரேவர்ஸ் என்ற மதுபான நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், எஸ்.என்.ஜே குரூப்பின் மதுபான நிறுவன அலுவலகத்திலும் இந்த அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுவருகிறது.

அக்கார்ட் டிஸ்டில்லர்ஸ் அண்ட் பிரேவர்ஸ்

அதேபோல், எழும்பூரில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருப்பதாகவும், டாஸ்மாக் ஊழல் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஒரே நாளில், தி.மு.க அமைச்சரின் நண்பர்களின் வீடுகள், அந்த அமைச்சர் முன்பு கவனித்து வந்த துறை சார்ந்த அலுவலகம் மற்றும் தி.மு.க எம்.பி-யின் மதுபான நிறுவனத்தின் அலுவலகம் ஆகியவற்றில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது பேசுபொருளாகியிருக்கிறது. இருப்பினும், அமலாக்கத்துறை தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிக்கை வெளியான பிறகு எந்தெந்த காரணங்களின் பின்னணியில் இந்த இடங்களில் சோதனை நடைபெற்றிருக்கிறது என்பது தெரியவரும்.

"செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வேன் எனச் சொன்னால்..!" - உச்ச நீதிமன்றம் சொன்னதென்ன?

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article