ARTICLE AD BOX
ஒருவரது உடலின் நோய் நகத்தில் தெரியுமாம்! நகத்தின் மாறுதல் நோயின் அறிகுறி.
அடி பாகத்திலிருந்து விரல் நுனி நோக்கி வளைந்த நகம் காச நோய் மற்றும் இருமல் போன்றவற்றின் அறிகுறி.
லேசான நீலம் கடந்த நகம் முறையற்ற ரத்த ஓட்டத்தின் அறிகுறி. இதயம் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாவும் இருக்கலாம்.
நகத்தில் ஏற்படும் குழிவு இரும்பு சத்து குறைவு தைராய்டு சுரப்பியினால் ஏற்படும் குறைபாடுகளுக்கு உண்டான அறிகுறி ஆகும்.
முன் விரல் அருகில் நகத்தில் அகலவாட்டில் ஏற்படும் பிளவு போன்ற கோடு சிறுநீரக கோளாறின் அறிகுறி.
நகத்தில் நீள வட்டமாக நகத்தில் ஏற்படும் மேடு பள்ளங்கள் சத்துணவு குறைபாட்டை குறிக்கின்றன.
நகத்தின் அடியில் உள்ள பகுதி வெள்ளை நிறமாக மாறுவது கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகும்.
நக வளர்ச்சி குறைவது நகம் கடினமாவது ஆகியவை மூச்சு குழல் மற்றும் தைராய்டு சுரப்பி ஏற்படும் குறைபாடுகளையும் மூட்டுகளில் ஏற்படும் நோய்களையும் குறிக்கின்றன.
நகத்தின் மேற்பகுதியில் ஏற்படும் செந்நிற கோட்டின் வரிகள் ரத்தக் குழாயில் ஏற்படும் கசிவையும் இரத்த கொதிப்பையும் குறிக்கின்றன.நகத்தில் வரும் புள்ளிகள் பள்ளங்கள் தோல் வியாதிகளின் அறிகுறியாகும்.
பொதுவாக நகங்கள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.
கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்.
சர்க்கரையின் அளவு அதிகமாகவும் புரதம் மற்றும் துத்தநாகசத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண் திட்டுக்கள் காணப்படும் .
ஊதா நிறங்களை நீங்கள் உங்கள் நகங்களில் கண்டால் உங்கள் இரத்த ஓட்டம் மிகவும் மோசமாக இருக்கிறது என்று அர்த்தம்.
உங்கள் நகங்கள் மெல்லிய அல்லது உடையக்கூடிய வகையில் இருந்தால் உங்கள் உணவில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லை என்ற அர்த்தமாகும்.
இப்படியெல்லாம் சொல்லப்பட்டாலும், இவை சில அறிகுறிகளே! நம் ஆரோக்கியத்தை பொறுத்தவரை மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பதே நல்லது!