ARTICLE AD BOX
தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ள இன்றைய காலகட்டத்தில், செல்போன் இல்லாத ஒருவரைப் பார்ப்பதே அரிதாகி விட்டது. பணம் இல்லாமல் கூட சிலர் இருக்கிறார்கள்; ஆனால் செல்போன் இல்லாமல் யாரும் இல்லை. அந்த அளவிற்கு செல்போன் நம்மை ஆட்டி வைக்கிறது. அன்று ஒரு ஊருக்கே ஒரே தொலைபேசி தான் என்றிருந்த காலம். ஆனால் இன்றோ ஒருவருக்கே இரண்டு, மூன்று சிம் கார்டுகள் உள்ளன. இந்நிலையில் பல ஆண்டுகளாக ஒரே சிம் கார்டைப் பயன்படுத்துபவர்கள் குறித்த நேர்மறையான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
செல்போன் இல்லாத காலகட்டத்தில், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது. ஆனால் நினைத்த மறுகணமே தொடர்பு கொண்டு பேச முடியும் என்ற சூழல் உருவானது செல்போன் வந்த பிறகு தான். செல்போன் ஒருவரைத் தொடர்பு கொள்வதற்கு மட்டுமின்றி சமூக ஊடகப் பயன்பாடு, ஓடிடி, இணைய சேவை, பணப்பரிமாற்றம் மற்றும் ஷாப்பிங் என பல விதமாக உதவுகிறது.
பொதுவாக ஒருவர் ஒரு சிம் கார்டைப் பயன்படுத்தும் போது, தேவையற்ற காரணங்கள் இன்றி அதனை மாற்ற மாட்டார். அப்படி பல ஆண்டுகளாக ஒரே சிம் கார்டு எண்ணைப் பயன்படுத்தும் நபர்கள் நேர்மையானவர்கள் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஏதேனும் பிரச்சினையில் மாட்டிக் கொண்டால் தானே சிம் கார்டை மாற்ற முயற்சிக்க வேண்டும். எவ்வித பிரச்சினையிலும் மாட்டிக் கொள்ளாதவர் சிம் கார்டை மாற்ற வேண்டிய அவசியமே இல்லையே.
7 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேல் ஒரே சிம் கார்டைப் பயன்படுத்தி வரும் நபர்கள், எவரையும் பகைத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அதோடு அவர் கடன் வாங்கியிருந்தால், முறையாக திருப்பிச் செலுத்துபவர். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என உங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், உங்கள் பெயரில் இந்த எண்ணைத் தானே சேமித்து வைத்திருப்பார்கள். அப்படி இருக்கையில் சிம் கார்டை மாற்றினால், அது அவர்களுக்கு சிரமமாக இருக்கும் என்ற உணர்வு உடையவர். அவ்வகையில் நீங்கள் அன்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்பவர்.
ஒரே சிம் கார்டைப் பயன்படுத்துபவர்களின் மீது எந்த குற்றவியல் வழக்குகளும் இல்லை என்றும், தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்பவர் என்றும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அவ்வகையில் இந்த நவீன காலத்தில் யாருக்கும் துன்பம் கொடுக்காமல், இப்படி வாழ்வது கூட மிகப்பெரிய கௌரவம் தானே!
யாரேனும் ஏதேனும் தவறு செய்தாலோ அல்லது பிரச்சினையில் சிக்கினாலோ முதலில் செல்போனைத் தான் ஸ்விட்ச் ஆஃப் செய்கின்றனர். ஏனெனில் இன்றைய தொழில்நுட்ப உதவியால், செல்போன் சிக்னல் மற்றும் சிம் கார்டை வைத்தே அவர் எங்கிருக்கிறார் என்று கண்டுபிடித்து விடலாம். அதேநேரம் ஒருவரே பல சிம் கார்டுகளையும் பயன்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு செல்போனும், சிம் கார்டும் மிக எளிதாக கிடைக்கிறது.
அவ்வகையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிம் கார்டைப் பயன்படுத்துவது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் தான். நீங்களும் இந்தப் பட்டியலில் இருந்தால், நிச்சயம் உங்களை நீங்களே பெருமையாக நினைத்துக் கொள்ளலாம்.