ARTICLE AD BOX
பட்டாப் பதிவுகள் என்பது நில உரிமை மற்றும் நில அளவுக்குத் தொடர்பான ஆவணங்களை ரெஜிஸ்டர் செய்வது ஆகும் நாம் முதலில் ஒருவரின் சொத்தை தமது பெயருக்கு பட்டா மாறுதலுக்காக கிரயம் செய்ய வட்டாட்சி அலுவலத்தை நேரில் செய்து விண்ணப்பிக்கும் நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்தது, மேலும் மக்கள் பட்டா மாறுதலுக்கு அடிக்கடி அலைச்சலுக்கு உள்ளாகும் வேண்டி நிலை ஏற்பட்டு வந்தது, இது தவிர லஞ்ச இல்லாமல் வேலையும் நடக்காது, இது போன்ற பிரச்சனை போக்க ஆன்லைன் மூலம் பட்ட வாங்கும் வசதியை அரசு கொண்டு வந்தது. மேலும் இதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் அலைச்சல் குறையும்
நமக்கு ஒரு சொத்து வாரிசுரிமைப்படியோ, பாகப்பரிவினை பத்திரபடியோ, உயில் ஆவணத்தின்படியோ, செட்டில்மெண்ட் பத்திரப்படியோ, விற்பனை மூலம் வாங்கியதாக இருந்தாலோ அதற்கு ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
ஆன்லைனில் பட்டா வாங்குவது எப்படி :
* பட்டா- பெயர் மாற்றம் அல்லது புதிய பட்டா வாங்குவதற்க நீங்கள் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
* பட்டா மாறுதல் விண்ணப்பிக்க அதில் (Apply Patta transfer) என உள்ள ஐகான்/லிங்கை க்ளிக் செய்ய வேண்டும். அது https://tamilnilam.tn.gov.in/citizen/ தளத்திற்கு போகும்.
* அதில் நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். அந்த எண்ணுக்கு எஸ்எம்ஸ் மூலம் ஓடிபி வரும். அதை கொடுத்து லாக்-இன் செய்ய வேண்டும். அதில் பயனர் பெயர், பெற்றோர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, பாலினம், முகவரி உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்க வேண்டும். இது விண்ணப்பதாரரின் விவரமாக எடுத்துக் கொள்ளும்.
* அதன் பின்னர் நீங்கள் வாங்கிய நிலம் அல்லது வீடு எந்த மாவட்டம், வட்டம், கிராமம், சார்பதிவாளர் அலுவலகம், ஆவணம் பதிவு செய்யப்பட்ட தேதி (சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்ட நாள்), ஆவணப் பதிவு எண், புல எண், உட்பிரிவு எண் போன்றவற்றை நில விவரங்களாக நீங்கள் வரிசையாக கொடுக்க வேண்டும்.
* பின்னர், தானப்பத்திரம், கிரையப் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம் போன்ற ஏதாவது ஒரு சொத்து பத்திரம், விண்ணப்பதாரரின் அடையாள சான்று (ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம்), குடியிருப்பு சான்று போன்றவற்றை இணைப்பு விவரங்களில் தர வேண்டும் டாக்குமெண்ட் வடிவில் இதனை ஆன்லைனில் அப்லோட் செய்ய வேண்டும்.
* அதன் பின்னர், விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை இணையவழியில் செலுத்த வேண்டும். யுபிஐ மூலமாகவும் கட்டணம் செலுத்தலாம். உட்பிரிவற்ற பட்டா மாற்றம் என்றால் விண்ணப்பக் கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும். உட்பிரிவுடன் பட்டா மாற்றம் என்றால் அதற்கான தொகையாக ரூ.400, விண்ணப்பக் கட்டணம் ரூ.60 சேர்த்து செலுத்த வேண்டும்.
8 கட்டணம் செலுத்திய பிறகு விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு, பட்டா மாறுதல் தொடர்பாக விண்ணப்பித்த தேதியை குறிப்பிட்டு அந்த விண்ணப்பத்தின் எண் உடன் சேர்த்து விண்ணப்பம் பெறப்பட்டது என்றும், அதற்கான சேவைக் கட்டணமாக பெற்றுக் கொண்ட தொகை குறித்த விவரம், பட்டா மாறுதல் மனு தொடர்பாக புல விசாரணைக்கு வருவாய்த் துறை அலுவலர்களால் (கிராம நிர்வாக அலுவலர் / நிலஅளவர்) தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ் உங்கள் மொபைலுக்கு வரும்.
* அதில், குறிப்பிட்டுள்ளது போல அதற்கான பணிகளும் நடைபெறும். அதன் பின்னர், பட்டா விண்ணப்பதாரருக்கு கிடைக்கும். மேலும், விண்ணப்பத்தின் நிலையை https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற தளத்திற்கு சென்று விண்ணப்ப எண்ணை கொடுத்து பயனர்கள் அறிந்து கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள் :
- விண்ணப்பத்தின் விவரங்கள்
- விண்ணப்பதாரர் பெயர்,
- தகப்பனார்/கணவர் பெயர்,
- இருப்பிட முகவரி,
- பதிவு மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரம். அதாவது
- மாவட்டம்,
- வட்டம்,
- கிராமத்தின் பெயர்,
- பகுதி எண்,
- நகர அளவை எண்/மறுநில அளவை எண்,
- உள்ளூர் பகுதி/நகரத்தின் பெயர்,
- தெருவின் பெயர்,
- மனைபிரிவு மனை எண்,
- போன்ற விவரங்கள் கொடுக்கப்படவேண்டும்.
- மனை அங்கீகரிக்கப்பட்டதா,
- அங்கீகாரம் இல்லாத மனையா,
என்பது பற்றித் தெரிவதற்காக மனைப்பிரிவு வரைபடத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
பிறகு சொத்து எந்த வகையில் விண்ணபதாரருக்குக் கிடைக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும்..
Read more:மாத சம்பளத்தை விட்டுத்தள்ளுங்க.. குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் பிஸினஸ் ஐடியா இதோ..!!
The post ஒரு ரூபாய் செலவு இல்லாமல்.. ஆன்லைனில் ஈஸியா பட்டா வாங்கலாம்..!! இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்.. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.