ARTICLE AD BOX
ராவல்பிண்டி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஏ பிரிவில் பாகிஸ்தான்-வங்கதேசம் அணிகள், ராவல்பிண்டி மைதானத்தில் மோத இருந்தன. ஆனால், மதியம் 2.30 மணிக்கு போட்டி தொடங்க இருந்த நிலையில் மழை இடைவிடாது பெய்தது. இதனால், குறிப்பிட்ட நேரத்தில் போட்டியை தொடங்க முடியவில்லை. டாஸ் போடாத நிலையில் பிற்பகல் 3.27 மணிக்கு போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நடப்பு சாம்பியனான பாகிஸ்தான், ஏற்கனவே நியூசிலாந்து, இந்தியாவிடம் தோல்வியடைந்தது.
அதேபோல், வங்கதேசமும் நியூசிலாந்து, இந்தியாவிடம் தோல்வியை தழுவியிருந்தது. இந்த ஆட்டம் கைவிடப்பட்டதால், தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன்மூலம் ஏ பிரிவில் 3வது இடத்தை வங்கதேசமும் (ரன்ரேட்-0.443), 4வது இடத்தை பாகிஸ்தானும் (ரன்ரேட்-1.087) பெற்று போட்டியை விட்டு வெளியேறியது. நடப்பு சாம்பியனாக இருந்தும், போட்டியை நடத்தும் நாடாக இருந்தும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் பாகிஸ்தான் வெளியேறியது, அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post ஒரு மேட்ச் கூட வின் பண்ணலையே… பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு பை..பை.. மழையால் போட்டி ரத்து appeared first on Dinakaran.