ஒரு மணி நேரம் லேட்... ஆவேச அண்ணாமலை வெளியிட்ட 2 அறிவிப்புகள்!

7 hours ago
ARTICLE AD BOX

மதுக்கடைகளுக்கு எதிர்ப்பாகப் போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் இன்று காலையில் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை விடுவிப்பதில் காவல்துறையினர் ஒரு மணி நேரம் தாமதித்துவிட்டதாகக் கூறி பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை அவேசம் அடைந்தார். 

சென்னையில் போராட்டம் நடத்தமுயன்று அக்கரை பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் பிடித்துவைக்கப்பட்டிருந்த அவர், மாலை 6 மணிவரை விடுவிக்கப்படவில்லை. அதையொட்டி அங்கிருந்த காவல்துறை அதிகாரியுடன் வாக்குவாதம் செய்தார். 

பின்னர் 6.50 மணிவாக்கில் அண்ணாமலையையும் அவருடன் கைதானவர்களையும் காவல்துறையினர் விடுவித்தனர். 

அதனால் கோபமடைந்த அண்ணாமலை, காவல்துறை முறைப்படி நடந்துகொள்ளவில்லை என்றும் தங்களை மதிக்காத காவல்துறையை இனி தாங்களும் மதிக்கப்போவதில்லை என்றும் கூறினார். 

மேலும், அடுத்த ஒரு வாரத்தில் பா.ஜ.க. மகளிர் அணியினர் டாஸ்மாக் மதுக் கடைகளில் முதலமைச்சர் ஸ்டாலினுடைய படங்களை ஆணியடித்து ஒட்டும் போராட்டமும், அதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூடும் போராட்டமும் என இரண்டு வாரங்களுக்குள் பா.ஜ.க.வின் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அண்ணாமலை கூறினார். 

சென்னையில் 22ஆம் தேதியன்று ஒரு போராட்டம் நடைபெற வாய்ப்பு உண்டு என்றும் அதையும் அறிவிக்கப்போவதில்லை என்றும் காவல்துறை பா.ஜ.க.வை மதிக்கும்வரை நாங்களும் அதை மதிக்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இதுவரை ஏழு முறை நோட்டீஸ் வழங்கியும் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்றும் 2026வரை பா.ஜ.க.வினர் தொடர்ந்து போராட்டம் நடத்துவார்கள் என்றும் அண்ணாமலை ஆவேசத்துடன் கூறினார்.  

Read Entire Article