ARTICLE AD BOX
நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸ் ஒரு நாளைக்கு 800 புஷ்-அப்ஸ் எடுப்பாரென வர்ணனையாளர் சைமன் டவுல் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் க்ளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். ஃபீல்டிங்கில் ரிஸ்வானின் கடினமான கேட்ச்சை பிடித்து அசத்தினார்.
இந்த கேட்ச் பிடித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிலிப்ஸுக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
ஒரு நாளைக்கு 800 புஷ்-அப்ஸ் எடுக்கும் க்ளென் பிலிப்ஸ்
உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் ஆர்வமுடைய க்ளென் பிலிப்ஸ் ஒரு நாளைக்கு 800 புஷ்-அப்ஸ் எடுப்பாரென நியூசிலாந்தின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சைமன் டவுல் கூறினார்.
இவர் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேட்டிங், ஃபீல்டிங், கேட்ச் என மூன்றிலும் க்ளென் பிலிப்ஸ் அசத்தினார்.
இந்தப் போட்டியில் சதமடித்த டாம் லாதம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆனால், க்ளென் பிலிப்ஸ் மக்களின் இதயத்தை வென்றுவிட்டார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.
The acrobatic fitness & reflex of the fielder to catch a ball hit at 100km/hr in less than a second reaction time.
A catch taken by cricketer Glenn Philips. The ball was traveling at more than 100km/hr after it hit the bat and he had less than a second to react and catch it. pic.twitter.com/KA5pHLsTlb