ஒன்றரை வருஷமா பலாத்காரம் செய்ய நானென்ன ரேபிஸ்டா?: நடிகர் பாலா கேள்வி..

20 hours ago
ARTICLE AD BOX
actor bala files complaint former wife

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான நடிகர் பாலா அண்மையில் தன் உறவுக்கார பெண்ணான கோகிலாவை திருமணம் செய்து கொண்டார். தன் மூன்றாவது மனைவியை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

பாடகி அம்ருதா சுரேஷை பிரிந்த பிறகு டாக்டர் எலிசபெத்தை திருமணம் செய்தார் பாலா. எலிசபெத்தை பிரிந்த பிறகு கோகிலாவை மணந்தார்.

இந்நிலையில், கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எலிசபெத் மீது புகார் அளித்திருக்கிறார் பாலா. மேலும் யூடியூபரான அஜு அலெக்ஸ் தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக தெரிவித்திருக்கிறார். பாலா தன் புகார் மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது,

‘எலிசபெத் என்னிடம் ரூ. 50 லட்சம் கேட்டார். நான் பணம் தர மறுத்த பிறகு எனக்கு எதிராக தன் யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிடத் துவங்கினார் என்றார்.

புகார் அளித்த பிறகு தன் மனைவியுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பாலா. அப்பொழுது பாலா கூறியதாவது, என்னையும், என் குடும்பத்தையும் சிலர் சமூக வலைதளங்கள் மூலமாக அசிங்கப்படுத்துகிறார்கள். இது ஒரு வெப்தொடர் மாதிரி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. நான் என்ன ரேபிஸ்டா? ஒரு பெண்ணை ஒன்றரை ஆண்டுகளாக எப்படி பாலியல் பலாத்காரம் செய்ய முடியும்?.

எனக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தபோது எலிசபெத் எங்கிருந்தார் என யாருக்குமே தெரியாது. ஒன்றரை வருடம் கழித்து என் மீது புகார் தெரிவிக்கிறார். எல்லாம் பணத்துக்காக பொய் சொல்கிறார் என்றார்.

பாலா தனக்கு துரோகம் செய்ததாக வீடியோ வெளியிட்டார் எலிசபெத். அதற்கு பதில் அளிக்கும் வகையில் கோகிலாவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியதாவது, இது எலிசபெத் அக்காவுக்கான மெசேஜ். உங்கள் வீடியோவை பார்த்தேன். நீங்கள் என்னை சேலஞ்ச் பண்ண மாதிரி இருந்தது. நான் என் மாமாவுடன் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். நீங்கள் பதிவுத் திருமணம் செய்ததை மக்களுக்கு முதலில் சொல்லுங்கள். நீங்கள் மக்களை ஏமாற்றுகிறீர்கள். உங்கள் கணவர் ஒரு டாக்டர் தானே. அதை முதலில் வெளியே சொல்லுங்கள்.

எதுவுமே வேண்டாம்னு போயிட்டு இப்போ வந்து புகார் சொல்கிறீர்கள். நீங்கள் ரொம்ப கீழ்த்தரமாக நடந்து கொள்கிறீர்கள். நீங்கள் 15 வருஷமா மருந்து சாப்பிடுகிறீர்கள். தயவு செய்து எங்களை வாழவிடுங்கள். எல்லாத்துக்குமே எங்களிடம் ஆதாரம் இருக்கிறது என்றார்.

actor bala files complaint former wifeactor bala files complaint former wife

The post ஒன்றரை வருஷமா பலாத்காரம் செய்ய நானென்ன ரேபிஸ்டா?: நடிகர் பாலா கேள்வி.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article