ARTICLE AD BOX
”ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து ஐ.ஏ.எஸ்- ஐபிஎஸ் வருவதற்குக் காரணம் பெரியார்தான்” என நடிகர் சிவகுமார் பெருமிதம் சேர்த்தார்.
திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், 2007ம் ஆண்டு தான் வரைந்த பெரியார் ஓவியத்தை மாணவ- மாணவிகளுக்குத் திரையிட்டுக் காண்பித்து பெரியார் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசினார் நடிகரும், ஓவியருமான சிவகுமார்.
விழாவில் அவர், ”ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து ஐ.ஏ.எஸ்- ஐபிஎஸ் வருவதற்குக் காரணம் பெரியார்தான். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வர்ணங்களாக மக்களைப் பிரிச்சு, கீழ் சாதி என மக்களை அவமானப்படுத்தி, முன்னேறவிடாமல் வைத்திருந்தபோது, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய போராளி பெரியார். 2007-ம் ஆண்டு பிரமாதமாக நான் வரைந்த கடைசி ஓவியம் இதுதான். இதற்குப் பிறகு நான் பெரியதாக எதுவும் வரையவில்லை” என அவர்ப் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவின் அப்போதைய முன்னணி நடிகர் சிவகுமார். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் இருந்த காலத்தில் இளம் நடிகராகவும், அவர்கள் திரைத்துறையிலிருந்து மெல்ல விலகும் நேரத்தில் முன்னணி நடிகராகவும் வலம் வந்தவர் சிவகுமார். சிவகுமார் முதன்முதலில் சிவாஜியின் ஓவியத்தை வரைந்து அவரிடம் பாராட்டைப் பெற்றிருக்கிறார். அதன்பின்னரே சிவாஜி திரைப்படங்களுக்கு ஓவியம் வரையும் மோகன் ஆர்ட்ஸ் என்ற வரை கலைப்பயிலகத்தில் சேர்த்துவிட்டார்.
அங்குதான் அவரின் பயணம் ஆரம்பித்தது. பின்னர் ‘காக்கும் கரங்கள்’ என்ற படத்தில் அறிமுகமாகி, பின்னர் சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற பிரபல நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். அன்னக்கிளி, ஆட்டுக்கார அலமேலு, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்து பைரவி போன்ற சூப்பர்ஹிட் படங்களில் நடித்து தென்தமிழகத்தின் மார்கண்டேயன் என்று புகழப்பட்டார்.