ஒடிஸா அருகே வங்கக் கடலில் நிலநடுக்கம்!

1 day ago
ARTICLE AD BOX

ஒடிஸா அருகே வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆகவும் 91 கிலோ மீட்டர் ஆழத்திலும் இன்று காலை 6.10 மணியளவில் பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க : கேரளத்தில் அதிர்ச்சி: காதலி உள்பட 5 பேரைக் கொலை செய்த இளைஞர்!

ஒடிஸா மாநிலம் புரி, பரதீப், பெர்ஹாம்பூர் மற்றும் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை உயிரிழப்பு அல்லது சேதங்கள் குறித்து எந்த புகாரும் பதிவாகவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article