ஐபிஎல்லில் எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை படைக்கும் அஜிங்க்யா ரஹானே

7 hours ago
ARTICLE AD BOX
ஐபிஎல்லில் எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை படைக்கும் அஜிங்க்யா ரஹானே

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; தோனி உள்ளிட்ட எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை படைக்கும் அஜிங்க்யா ரஹானே

எழுதியவர் Sekar Chinnappan
Mar 17, 2025
04:34 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கவுள்ள அஜிங்க்யா ரஹானே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியை வழிநடத்த உள்ளார்.

கேகேஆர் அணி வெங்கடேஷ் ஐயரை அதிக தொகை கொடுத்து வாங்கியதால், அவரே கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், தனது அடிப்படை விலையான ரூ.1.50 கோடிக்கு வாங்கப்பட்ட அஜிங்க்யா ரஹானேவை கேப்டனாக நியமித்தது.

இவர் கடந்த இரண்டு ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கேகேஆர் அணியை வழிநடத்த உள்ள ரஹானே எம்எஸ் தோனி, ரோஹித் ஷர்மா உள்ளிட்ட எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை படைக்க உள்ளார்.

கேப்டன் 

மூன்று வெவ்வேறு அணிகளின் கேப்டன்

ஐபிஎல் 2025 தொடக்க நாளில் கேகேஆர் அணியை வழிநடத்தும் அஜிங்க்யா ரஹானே, மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை கேப்டனாக வழிநடத்தும் முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றை படைப்பார்.

ரஹானே முதன்முதலில் ஐபிஎல் 2017ல் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் (ஆர்பிஎஸ்) அணியில் ஸ்டீவ் ஸ்மித் இல்லாதபோது, ஒரு போட்டியில் கேப்டனாக செயல்பட்டார்.

அதைத் தொடர்ந்து 2018இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பி அங்கு கேப்டனாக செயல்பட்டார்.

பின்னர் சிஎஸ்கே உள்ளிட்ட வெவ்வேறு அணிகளில் விளையாடிய ரஹானே தற்போது கேகேஆர் அணியின் கேப்டனாகி உள்ளார்.

இதற்கிடையே, குமார் சங்கக்காரா, மகேலா ஜெயவர்தனே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஒட்டுமொத்தமாக ஐபிஎல்லில் மூன்று வெவ்வேறு அணிகளில் கேப்டனாக இருந்த சிறப்பைக் கொண்டுள்ளனர்.

Read Entire Article