ARTICLE AD BOX

டெல்லி ,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த தொடருக்காக அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த நிலையில் ,தமிழக வீரர் நடராஜன் டெல்லி அணியுடன் இன்று இணைந்துள்ளார் . நடராஜனை ஐபிஎல் ஏலத்தில் ரூ.10.75 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது�