ARTICLE AD BOX
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் பதிவு செய்த வீரர்கள் லிஸ்ட்டைப் பார்ப்போம். கிறிஸ் கெயில் 175 ரன்களை எடுத்து இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருக்கிறார் அடுத்த இடத்தில் பிரென்டன் மெக்கல்லம் 158 ரன்களை எடுத்தார்.
கிறிஸ் கெயில்
புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 2013ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடந்த மேட்ச்சில் ஆர்சிபிக்காக விளையாடிய கெயில் 175 ரன்கள் எடுத்தால் அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான கிறிஸ் கெய்ல், விளையாட்டு வரலாற்றில் மிகவும் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்களில் ஒருவர். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் ஒரு ஆதிக்க சக்தியாக உள்ளார். அவர் அனைத்து வடிவங்களிலும் மேற்கிந்திய தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
பிரென்டன் மெக்கல்லம்
நியூசிலாந்தைச் சேர்ந்த பிரென்டன் மெக்கல்லம் 73 பந்துகளில் 158 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2008ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி விளையாடிய மெக்கல்லம் 158 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது ஸ்டிரைக் ரேட் 216.43 ஆக அந்த மேட்ச்சில் இருந்தது. மெக்கல்லம் ஒரு முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர், அவரது அதிரடியான பேட்டிங் பாணி மற்றும் தலைமைத்துவ குணங்களுக்காக பரவலாக அறியப்படுகிறார். அவரது ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர்.
குவின்டன் டி காக்
இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தில் இருப்பவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த குவின்டன் டி காக். இவர் 70 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போது இந்த ஸ்கோரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக எடுத்தார். இந்த மேட்ச் 2022ம் ஆண்டு மே 18ம் தேதி நடந்தது.
குயின்டன் டி காக் ஒரு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர், அவரது ஆக்ரோஷமான பேட்டிங் மற்றும் துடிப்பான விக்கெட் கீப்பிங் திறமைக்கு பெயர் பெற்றவர். இளம் வயதிலேயே தென்னாப்பிரிக்காவுக்காக அனைத்து வடிவங்களிலும் அறிமுகமானார். குறிப்பாக வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் அதிரடி இன்னிங்ஸ்களை விளையாடும் திறனுக்காக டி காக் அங்கீகரிக்கப்படுகிறார்.
ஏபி டிவில்லியர்ஸ்
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஏபி டி வில்லியர்ஸ் 59 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஸ்கோரை 2015ம் ஆண்டு மே 10ம் தேதி வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பதிவு செய்தார். இவர் ஆர்சிபி அணிக்காக அந்த மேட்ச்சில் விளையாடினார்.
ஒரு சிறந்த ஃபீல்டராகவும், அவ்வப்போது விக்கெட் கீப்பராகவும் இருந்த அவர், தென்னாப்பிரிக்காவின் கேப்டனாக இருந்தார், ஐபிஎல் போன்ற லீக்குகளில் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றார். டி வில்லியர்ஸ் 2018 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், ஆனால் ஒரு கிரிக்கெட் ஐகானாகவே இருக்கிறார்.
கே.எல்.ராகுல்
இந்திய கிரிக்கெட் அணி கே.எல்.ராகுல் இந்தப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். இவர் 69 பந்துகளில் 132 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இந்த ஸ்கோரை எடுத்தார். ஆர்சிபிக்கு எதிராக 2020ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி இந்த மேட்ச் நடந்தது.

டாபிக்ஸ்