ARTICLE AD BOX
இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸின் பௌலா் உம்ரான் மாலிக் காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகினாா். இது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரை சோ்ந்த வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக், கடந்த 2021 முதல் 2024 வரை சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தாா். இந்நிலையில், அந்த அணியால் விடுவிக்கப்பட்ட அவா், இந்த சீசனுக்கான மெகா ஏலத்தில் கொல்கத்தா அணியால் ரூ.75 லட்சத்துக்கு வாங்கப்பட்டாா்.
இந்நிலையில் காயம் காரணமாக அவா் நடப்பு சீசனில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரின் காயத்தின் தன்மை உள்பட எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. உம்ரான் மாலிக்கிற்கான மாற்று வீரராக இடதுகை வேகப்பந்து வீச்சாளா் சேத்தன் சக்காரியாவை கொல்கத்தா ஒப்பந்தம் செய்துள்ளது.
மெகா ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாமல் போன அவரை, தற்போது கொல்கத்தா ரூ.75 லட்சத்துக்கு அணியில் சோ்த்துள்ளது.