ARTICLE AD BOX
2025 18-வது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் உலகில் முதல் வீரராக பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து நகர்ந்து கொண்டு புதிய கேப்டனாக இளம்வீரர் ருதுராஜை கொண்டு வந்தார். இந்த வருடமும் அவரது தலைமையின் கீழே சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரை சந்திக்க இருக்கிறது.
மீண்டும் வந்த தோனி
இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக சர்வதேச போட்டிகளில் ஐந்து ஆண்டுகளாக விளையாடாதவர்கள் அன்கேப்டு வீரர்களாக அறிவிக்கப்பட்டார்கள். இதன்படி மகேந்திர சிங் தோனி அன்கேப்டு வீரராக வந்தார். இவரை நான்கு கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணி மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.
மேலும் கடந்த வருடம் போல் தோனி எல்லா போட்டிகளிலும் சிஎஸ்கே அணிக்காக களம் இறங்குவது சந்தேகம் என இந்திய லெஜெண்ட் அனில் கும்ப்ளே தெரிவித்திருக்கிறார். ஆனால் சிஎஸ்கே பயிற்சி முகாமில் தோனி தவறாமல் கலந்து கொண்டு சிறப்பான முறையில் விளையாட வருகின்ற வீடியோக்களை பார்க்க முடிகிறது. எனவே இந்த முறையும் அவர் எல்லா போட்டிகளிலும் விளையாடுவார் என்று தெரிகிறது.
தோனி படைக்க இருக்கும் சாதனை
தற்போது தோனி மொத்தம் 391 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். ஏப்ரல் 25ஆம் தேதி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே நிக்காக அவர் தொடர்ந்து விளையாடினால் 400வது டி20 போட்டியை விளையாடுவார். இந்த வகையில் தோனி யாரும் செய்யாத புதிய சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார்.
இதையும் படிங்க : தோனி அடிச்சது தான் கஷ்டம்.. இப்போ எல்லாம் ரூல்ஸ், உங்களுக்கு சாதகமாக மாறிடுச்சி.. இங்கிலாந்து வீரர் மோயின் அலி
இதன் மூலம் 400 டி20 போட்டிகள், 350 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 50 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் விளையாடிய ஒரே வீரராக மகேந்திர சிங் தோனி சாதனை படைப்பார். இதற்கு முன்பு இத்தனை சர்வதேச போட்டிகள் உடன் சேர்த்து 400 டி20 போட்டிகள் விளையாடிய வீரர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஐபிஎல் ஏப்ரல் 25.. உலகின் முதல் வீரராக தோனி படைக்க இருக்கும் பிரம்மாண்ட சாதனை – முழு தகவல்கள் appeared first on SwagsportsTamil.