தோழமை, முக்கியத்துவம் இல்ல.. ஆர்சிபி 0 சிஎஸ்கே 5 கோப்பைகளை வெல்ல இதான் காரணம்.. ஜகாதி பேட்டி

10 hours ago
ARTICLE AD BOX

ஐபிஎல் 2025 டி20 தொடர் மார்ச் 22ஆம் தேதி இரவு கொல்கத்தாவில் துவங்குகிறது. அதில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக 2008 முதல் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல் திணறி வரும் பெங்களூரு அணி இம்முறை ரஜத் படிதார் தலைமையில் முதல் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய வெற்றிகரமான அணிகள் தங்களது அலமாரியில் 6வது கோப்பையை அடுக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளன. இந்நிலையில் பெங்களூரு அணியில் எப்போதுமே விராட் கோலி போன்ற ஓரிரு வீரர்கள் மீது மட்டுமே அதிக கவனம் செலுத்தப்படுவதாக சடாப் ஜகாதி தெரிவித்துள்ளார். ஆனால் சென்னை அணியில் அனைத்து வீரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

சென்னை – பெங்களூரு வித்யாசம்:

அதனாலேயே சென்னை 5 கோப்பைகளை வென்றுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். 2010, 2011 ஐபிஎல் கோப்பைகளை சென்னை வெல்வதற்கு உதவிய ஜகாதி 2014 முதல் பெங்களூரு அணிக்காக சில வருடங்கள் விளையாடினார். 2010 ஐபிஎல் ஃபைனலில் சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை எடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு. நீங்கள் அதில் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் அணியாக விளையாட வேண்டும். 2 – 3 வீரர்களால் மட்டும் உங்களுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியாது. சென்னை அணியில் வலுவான இந்திய வீரர்களும் சில நல்ல வெளிநாட்டு வீரர்களும் இருந்தனர். அது போன்றக் கலவையை பெறுவது முக்கியம்”

2 – 3 பேருக்கு முக்கியத்துவம்:

“ஆனால் பெங்களூரு அணி என்று வரும் போது அவர்கள் 2 – 3 வீரர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துவார்கள். அணி நிர்வாகம் மற்றும் உடைமாற்றும் அறை சூழ்நிலையில் அந்த இரு அணிகளுக்கிடையே பெரிய வித்தியாசம் இருந்தது. பெங்களூரு அணியில் வீரர்கள் மிகவும் நன்றாக இருந்தனர். ஆனால் அவர்களுக்கிடையே தோழமை அல்லது பசை போன்ற நட்புணர்வு சரியாக இல்லை”

இதையும் படிங்க: 13.1 ஓவரில் 137.. 16க்கு 11 ஜிம்பாப்வேவை தாண்டி ஃசெல்ப் எடுக்காத பாகிஸ்தான்.. அப்ரிடியை நொறுக்கி நியூஸி வெற்றி

“ஏற்கனவே சொன்னது போல் அணி நிர்வாகத்தின் வேலை மிகவும் முக்கியமானது. அந்த வகையில் சென்னை அணி நிர்வாகம் உண்மையில் நன்றாக இருந்தது. அவர்கள் தங்களது வீரர்களை நன்றாக பார்த்துக் கொண்டனர். அது போன்ற சிறிய விஷயங்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே இது தான் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான வித்தியாசம் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.

The post தோழமை, முக்கியத்துவம் இல்ல.. ஆர்சிபி 0 சிஎஸ்கே 5 கோப்பைகளை வெல்ல இதான் காரணம்.. ஜகாதி பேட்டி appeared first on Cric Tamil.

Read Entire Article