ARTICLE AD BOX
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஹைதராபாத் வந்தடைந்தார். இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச்.22ஆம் தேதி தொடங்கவிருக்கின்றன.
வெளிநாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் அதன் அணிகளுக்கு சென்றுவருகின்றனர்.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் அதன் அணியில் வந்தடைந்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இருக்கும் ஒரே வெளிநாட்டு கேப்டன் என்றால் அது பாட் கம்மின்ஸ் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
பார்டர் கவாஸ்கர் தொடரினை வென்ற பிறகு தனது மனைவி தாயாகப்போவதால் விடுப்பில் சென்றார்.
பின்னர், காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகினார். மூத்த வீரர்கள் இல்லாமல் ஆஸி. அணி அரையிறுதிவரை முன்னேறி இந்தியாவிடம் தோற்றது.
கடந்த ஐபிஎல் தொடரில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்தமுறை கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கிறது.
கம்மின்ஸ் பேசியதாவது:
மீண்டும் அணியில் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த சீசன் முடிந்த ஓராண்டு ஆகவிருக்கிறது. அனைவரையும் பார்ப்பது ஆவலாக இருக்கிறது. ஆரஞ்சு ஆர்மி (ரசிகர்கள்) நம்பமுடியாத பயணம். கடந்தமுறை போலவே இந்தமுறையும் சிறப்பாக செயல்பட ஆவலாக இருக்கிறோம் என்றார்.
The next couple of months are going to be amazing indeed, Skip
Pat Cummins | #PlayWithFire pic.twitter.com/XoKvlhRdl1