ARTICLE AD BOX
மும்பை: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நடப்பு தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு 5 அணிகள் முன்னேறி விட்ட நிலையில் கடைசி இடத்துக்கு ஒடிஷா எப்சி, மும்பை அணிகளுக்கு இடையே போட்டி இருந்தது. இந்நிலையில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்சி அணியுடன் மும்பை மோதியது. ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்ட பெங்களூரை 0-2 என்ற கணக்கில் மும்பை வீழ்த்தியது. அதனால் 36 புள்ளிகளுடன் மும்பை கடைசி அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
*பிளே ஆப் போட்டிகள்
அரையிறுதிக்கு 2 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில் அடுத்து 4 இடங்களை பிடித்துள்ள நார்த் ஈஸ்ட் யுனைடட் எப்சி, பெங்களூரு எப்சி, ஜாம்ஷெட்பூர் எப்சி, மும்பை சிட்டி எப்சி அணிகள் பிளே ஆப் சுற்றில் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதியில் முதல் 2 இடங்கள் பிடித்த மோகன் பகான், கோவா அணிகளுடன் 2 சுற்றுகளாக விளையாடும். ஷில்லாங்கில் நடைபெறும் முதல் பிளே ஆப் போட்டியில் நார்த் ஈஸ்ட்-மும்பை சிட்டி அணிகளும், பெங்களூரில் நடைபெறும் 2வது பிளே ஆப் ஆட்டத்தில் பெங்களூரு-ஜாம்ஷெட்பூர் அணிகளும் மோதும்.
The post ஐஎஸ்எல் கால்பந்து: பிளே ஆப் சுற்றுக்கு மும்பை அணி தகுதி appeared first on Dinakaran.