ARTICLE AD BOX

புதுடெல்லி,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.இதில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் மார்ச் 23-ந்தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்சுடன் மோத உள்ளது.
இந்த நிலையில் டெல்லி அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார் அவர் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி, பந்து வீச்சு பயிற்சியாளர் முனாப் பட்டேல், ஆகியோருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.
டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை வருகிற 24-ந் தேதி எதிர்கொள்கிறது.