ARTICLE AD BOX
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியைக் காண வருகை தரும் ரசிகர்கள் அனைவரும், மாநகர பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் அனைத்தும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. பல்வேறு தரப்பில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களின் திறமையை உலக அரங்கில் கொண்டு வருவதற்காக நடத்தப்படும் இந்த போட்டிக்கு, ஏராளமானன ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்தப் போட்டிகள் அனைத்தும் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் அமைந்திருக்கும் கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளன. அதனடிப்படையில், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திலும் போட்டிகள் நடைபெறவுள்ளன.
எனவே, இந்த போட்டிகளைக் காண சென்னை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற ஊர்களில் இருந்தும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வருகை தருவார்கள்.
இந்நிலையில், ரசிகர்களின் பயணத்தை எளிதாக்கும் விதமாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில், 2025 ஐ.பி.எல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியைக் காண வரும் ரசிகர்கள் அனைவரும், போட்டியின் டிக்கெட்டை பயன்படுத்தி மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஏ.சி அல்லாத பேருந்துகளில் மட்டுமே இவ்வாறு இலவசமாக பயணிக்க முடியும். மேலும், போட்டி தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக தான் இந்த இலவச பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தவிர இந்தப் போட்டிகள் அனைத்தையும் ஜியோஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் ஒளிபரப்புவது குறிப்பிடத்தக்கது.