ARTICLE AD BOX

image courtesy:twitter/@IPL
கொல்கத்தா,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். வெற்றிகரமாக 17 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதன் 18-வது சீசன் இன்று (22-ம் தேதி) தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இந்த சீசன் கோலாகலமாக தொடங்குகிறது.
ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை அளிக்கப்படும் என்ற விவரம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் கடந்த சீசனை போலவே கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.12.5 கோடியும் பரிசுத்தொகையாக அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.