ARTICLE AD BOX
2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ள லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறவே முடியாது என சமூக வலைதளங்களில் ஒரு புள்ளிவிவரத்தை ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு மோசமான ராசி உள்ளது என்றும், அந்த அணி கடந்த 12 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றதில்லை எனவும் சுட்டிக்காட்டுகிறார்கள். கடைசியாக 2012 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. அந்தப் போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெற்றது.

அதற்குப் பிறகு 12 ஆண்டுகளாக எப்போதும் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றதில்லை. ஆனால், அதே காலகட்டத்தில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையையும் வென்று இருக்கிறது. எனவே முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணியால் கோப்பை வெல்ல முடியும் என்ற ஒரு விஷயமும் உள்ளது.
மற்றொரு புறம் 12 ஆண்டுகளுக்கு முன் எப்படி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியதோ, அதே போல இப்போதும் வீழ்த்த முடியும் என மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டுள்ளனர். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது மோசமான நிலையில் உள்ளது.
அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம் பெறவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் அவர் இந்த முறை ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.
IPL 2025: “ரிங்கு சிங் அவுட் ஆவதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்”.. விளாசிய சேவாக்
மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் விளையாட உள்ளார். எனவே மும்பை இந்தியன்ஸ் அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் விளையாட உள்ளது. இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி பெறுமா என்று பார்க்கலாம்.
செய்தி சுருக்கம்:
- மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 12 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றதில்லை என்ற புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.
- கடைசியாக 2012ல் சென்னைக்கு எதிராக சேப்பாக்கத்தில் முதல் போட்டியில் வென்றது.
- அதே காலகட்டத்தில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
- பும்ரா காயம் காரணமாகவும், ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் களமிறங்குவதால் மும்பை அணி சவால்களை சந்திக்கிறது.
- சூர்யகுமார் யாதவ் தலைமையில் மும்பை அணி சிஎஸ்கே-வை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது.