ஐ.பி.எல். 2025: இந்த அணிதான் கோப்பையை வெல்லும் - ஆஸி.முன்னாள் கேப்டன் கணிப்பு

8 hours ago
ARTICLE AD BOX

image courtesy:twitter/@IPL

சிட்னி,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அரங்கேறுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்த தொடரில் வெற்றி பெறப்போகும் அணி குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் இந்த தொடரில் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கோப்பையை வெல்லும் என்று கணித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நான் ஒரு தலைபட்சமாக இருப்பேன். நான் எனக்கு பிடித்த ஒரு வீரர் அடிப்படையில் தேர்வு செய்கிறேன். அந்த சூழலில் பேட் கம்மின்ஸ் தலையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிதான் கோப்பையை வெல்லும் என்று நான் கருதுகிறேன். வரும் சீசனில் பந்துவீச்சு அவர்களுக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்று நினைக்கிறேன். அவர்களின் பேட்டிங் யூனிட் வலுவாக உள்ளது, ஒரு கேப்டனாக கம்மின்ஸ் கடந்த சீசனில் இருந்து நிறைய கற்றுக்கொண்டிருப்பார். டெத் பவுலிங் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். கம்மின்ஸ் அதில் முக்கிய பங்காற்றுவார்" என்று கூறினார்.


Read Entire Article