`ஏழைக்கு ஒரு கல்வி, வசதி படைத்தோருக்கு ஒரு கல்வி...' - மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக சரத்குமார்

10 hours ago
ARTICLE AD BOX
'சமத்துவ மக்கள் கட்சி'யைக் கலைத்துவிட்டு, 'பா.ஜ.க' பிரமுகராகியிருப்பவர் சரத்குமார்.

திரைப்படங்களில் பிஸியாகயிருபவர், அவ்வப்போது தனது எக்ஸ் தளத்தில் தனது அரசியல் கருத்துகளைத் தெரிவித்த வண்ணமிருக்கிறார். சமீபத்தில் விஜய்யின் 'த.வெ.க' 2ம் ஆண்டு தொடக்க விழாவைக் குறிப்பிட்டு, "அன்புச் சகோதரர் விஜய் ரொம்பவே பாப்புலரான நடிகர். உங்களுக்கு தமிழக அரசியல் வியூகத்தை வகுத்துக் கொடுக்க இந்தி தெரிந்த ஒருத்தர் வந்து தான் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? டேய், எங்கடா இருக்கீங்க நீங்களாம், யாருக்கிட்டட ஃபிராடுத்தனம் பண்றீங்க?

சரத்குமார்

What Bro? Why bro? சொந்தத் தொகுதியிலேயே தோற்ற பிரசாந்த் கிஷோர் விஜய்யை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதைப் பார்க்கலாம். பிரசாந்த் கிஷோர் திமுகவை ஜெயிக்க வைத்ததுபோல விஜய் கட்சியை ஜெயிக்க வைப்பாரா? வரும் தேர்தலில் அதையும் பார்த்துவிடுவோம்" என்று பெரம்பலூரில் பாஜக சார்பில் சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

இதையடுத்து தற்போது மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, "தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து, மக்களை அரசு திசைதிருப்பி வரும் நிலையில், பிற தென்னிந்திய மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை இருந்தும் தமிழ்நாடு அரசு அதனை ஏற்க மறுத்து இருமொழிக் கொள்கைக்காக பேசிக் கொண்டு வருவது நியாயமற்றது. மும்மொழிக் கொள்கையில் மூன்றாவது மொழியாக ஏதேனும் இந்திய / பன்னாட்டு மொழி கற்றுக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது எனும்போது, அதை அரசு மறுப்பதற்கு முக்கிய காரணமாக போதிய ஆசிரியர்கள் இல்லை, ஆசிரியர்களை நியமிப்பது முடியாத காரியம் என்றெல்லாம் பேசுகிறார்கள்.

சரத்குமார்

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இந்த நவீன காலக்கட்டத்தில் 50 வருடங்கள் பின்னோக்கிய சிந்தனையை என்னவென்று சொல்வது? கொரோனா காலத்தில் 2 வருடங்கள் மாணவர்கள் பள்ளிக்கே சென்று படிக்க முடியாத சூழல் இருந்தும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டன. அதுபோன்று, மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்த வாரத்திற்கு 2 – 3 தினங்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்திட பிற மொழி கற்ற ஆசிரியர்களை நியமித்து வாய்ப்பை உருவாக்கலாம். எந்தவொரு செயல்திட்டமும் முடியாது, நடக்காது என்று சொல்வது எந்தவகையில் நியாயம்? மும்மொழி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் வேறு என்ன சிரமம் இருக்கிறது என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் எவரும் இருசாரார் கருத்தையும் கேட்டோ, அறிக்கைகளை படித்தோ கருத்து சொல்வதில்லை. இதில் மையத்தை சார்ந்தவர்கள் இருமொழிக் கொள்கைக்காக உயிர்விடலாம் என கருத்து தெரிவிப்பதை என்னவென்று சொல்வது? மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி விஷயத்தில் மக்களை தூண்டிவிடுவது அறிவார்ந்த செயல் அல்ல" என்று கூறியிருக்கிறார்

சரத்குமார் - அண்ணாமலை

மேலும், “ஏழைக்கு ஒரு கல்வி, வசதி படைத்தோருக்கு ஒரு கல்வி. தமிழ் வளர்க்கிறோம் என்பவர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ், ஆங்கிலம் மட்டும் கற்பிக்கும் பள்ளிகளில் சேர்த்து தமிழை வளர்க்கலாமே? ஏழைக்கு ஒரு கல்வி, வசதி படைத்தவர்களுக்கு ஒரு கல்வி என்பது எப்படி சமத்துவம் ஆகும்? அரசுப்பள்ளி மாணவர்களிடம் ‘நீ இருமொழிக் கொள்கைதான் படிக்க வேண்டும். உன் தகுதிக்கு இது போதும்' என்பது போல் அணைகட்டி, உங்கள் வியாபார தேவைக்காக அவர்கள் வளர்ச்சியை தடுக்கக் கூடாது” என்று பேசியிருக்கிறார்.

Read Entire Article